கர்நாடகா| ஓடும் பைக்கில் எல்லை மீறிய காதல் ஜோடி.. வைரலால் வலைவீசிய போலீஸ்! #ViralVideo

கர்நாடகாவில், டூவீலரின் முன்னிருக்கையில் தன் காதலியை உட்கார வைத்து வேகமாய் அழைத்துச் சென்ற இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
video image
video imageட்விட்டர்

இன்றைய இளம்தலைமுறையினர் சமூக வலைதளங்களில் லைக்ஸ்களை அள்ள, பல்வேறு வகையிலும் ரீல்ஸ் எடுத்து அதைப் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலரோ காதலிகளைக் குஷிபடுத்துவதற்காகவே டூவீலரின் முன்னிருக்கையில் உட்கார வைத்து வேகமாய் அழைத்துச் செல்கின்றனர். இது பார்ப்போரை முகம்சுளிக்க வைக்கிறது. தவிர, இதுபோன்ற காட்சிகள் இணையதளங்களிலும் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், கர்நாடக மாநிலம் விமான நிலைய ரோட்டில் உள்ள எலகங்கா மேம்பாலத்தில் வாலிபர் ஒருவர், தன்னுடைய காதலியை மடியில் அமர வைத்து மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றிருந்தார்.

அதாவது பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்திருந்த இளம்பெண், தனது காதலனின் தொடை மீது ஏறி அமர்ந்து கட்டியணைத்தப்படி சென்றார். இதைப் பார்த்த வாகன ஓட்டி ஒருவர், இணையத்தில் பதிவிட்டார். இது, எலகங்கா போக்குவரத்து போலீஸாரின் கவனத்திற்கும் வந்தது. அந்த வாலிபர் மற்றும் இளம்பெண் ஹெல்மெட் அணியாமலும், விதிமுறைகளை மதிக்காமலும் மோட்டார் சைக்கிளில் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, எலகங்கா போக்குவரத்து போலீசார், சிசிடிவி மற்றும் வாகன எண் உள்ளிட்டவற்றை வைத்து அந்த ஜோடியைக் கண்டுபிடித்துள்ளனர். தவிர, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதையும் படிக்க: கர்நாடகா|இறந்துபோன தாய்.. சடலத்துடன் வசித்த மனநலம் பாதித்த மகள்.. அடுத்து நடந்த சோகம்!

video image
ஓடும் பைக்கில் எல்லை மீறிய செய்கை.. ரீல்ஸ் மோகத்தில் காதல் ஜோடி விபரீதம்.. மடக்கி பிடித்த போலீஸ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com