ஓடும் பைக்கில் எல்லை மீறிய செய்கை.. ரீல்ஸ் மோகத்தில் காதல் ஜோடி விபரீதம்.. மடக்கி பிடித்த போலீஸ்!

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூரில் பைக்கில் காதல் ஜோடி ஒன்று எதிரெதிர் திசையில் அமர்ந்து சென்ற வீடியோ வைரலானது.
lovers
loverstwitter

இன்றைய இளம்தலைமுறையினர் சமூக வலைதளங்களில் லைக்ஸ்களை அள்ள, பல்வேறு வகையிலும் ரீல்ஸ் எடுத்து அதைப் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூரில் பைக்கில் காதல் ஜோடி ஒன்று எதிரெதிர் திசையில் கட்டிப்பிடித்தபடி அமர்ந்து சென்றனர். இந்த வீடியோ வைரலானது. அவர்களுடைய செய்கைகளும் விமர்சிக்கப்பட்டது. அடுத்து பைக்கில் பயணித்த ஜோடி ஹெல்மெட் அணியவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து காவல் துறையும் அந்த ஜோடியைப் பின்தொடர்ந்து களத்தில் இறங்கியது. காரில் அவர்களைச் சென்று பிடித்து விசாரித்தது.

இச்சம்பவம் குறித்து எஸ்பி ஷஷி மோகன் சிங், “குங்குரியில் இருந்து ஜாஷ்பூருக்குச் செல்லும் வழியில் அவர்கள் பயணிப்பதை நாங்கள் கண்டோம். அவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தோம். அவர்கள் மாயாலி அணையை பார்வையிட வந்ததாகவும், ரீல்ஸ் எடுப்பதாகவும் தெரிவித்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.

இதையும் படிக்க: ’ஸ்வீட்டி பேபி’ எனக் கூப்பிட்ட உயரதிகாரி.. தொல்லை தாங்கவில்லை என நீதிமன்றத்தை அணுகிய இளம்பெண்!

lovers
பைக்கில் உலா வந்து செயின் திருடும் காதல் ஜோடி... 100 கிலோ மீட்டர் வேகத்தில் சிட்டாய் பறந்த சம்பவம்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com