கர்நாடகா: மீண்டும் முறியும் மஜத? மாநிலத் தலைவர் போர்க்கொடி!

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு எதிராக சி.எம்.இப்ராஹிம் போர்க்கொடி தூக்கியுள்ளதால் மஜதவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இப்ராஹிம், குமாரசாமி
இப்ராஹிம், குமாரசாமிட்விட்டர்

சித்தராமையா தலைமையில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி

அண்டை மாநிலமான கர்நாடகாவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் அதிக தொகுதிகளைக் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து முதல்வர் சித்தராமையா தலைமையிலான ஆட்சி அங்கு நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில் இந்த தேர்தலில் பாஜகவும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் (மஜத) தோல்வியுற்றன. முன்னதாக இம்மூன்று கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டன. இதனால் கர்நாடகாவில் மும்முனைப் போட்டி நிலவியது குறிப்பிடத்தக்கது.

நட்டா, குமாரசாமி, அமித்ஷா
நட்டா, குமாரசாமி, அமித்ஷாட்விட்டர்

பாஜகவுடன் இணைந்த மஜத; தலைவர்கள் விலகல்!

இதன் காரணமாகவே, மஜத பெருத்த அடி வாங்கியதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில்தான் வரும் நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில்கொண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி, கடந்த மாதம் இணைந்தது. இதுதொடர்பாக கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி டெல்லி சென்று ம‌த்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்புக்குப் பின்னர், மஜதவின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக தெரிவித்தார். இதனை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிறுவனர் தேவகவுடாவும் உறுதிப்படுத்தினார். இதனால் மஜதவில் இருக்கும் இஸ்லாமியர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். அத்துடன், முக்கியத் தலைவர்கள் பலரும் அக்கட்சியில் இருந்து விலக ஆரம்பித்தனர்.

இப்ராஹிம், குமாரசாமி
ராஜஸ்தான்: சில்லறை மூட்டையுடன் ஐபோன் வாங்க சென்ற பிச்சைக்காரர் (!)...!

மஜத மாநில தலைவர் அதிருப்தி; போர்க்கொடி!

இந்நிலையில் மஜத மாநில தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சி.எம்.இப்ராஹிம், ‘‘பாஜகவுடன் கூட்டணி வைத்தது தொடர்பாக எனக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. குமாரசாமி இந்த விவகாரத்தில் திட்டமிட்டே என்னை புறக்கணித்துள்ளார். எனது தலைமையிலான மஜத, பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லை. தேவகவுடாவும் குமாரசாமியும் பாஜகவுடன் கூட்டணி வைத்து கட்சியைப் பலி கொடுத்துவிட்டனர்.

எனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மஜத எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன். இன்னும் ஓரிரு நாட்களில் எங்களது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்க இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “பாஜகவுடனான கூட்டணிக்கு கட்சியின் நிறுவனர் தேவ கவுடா ஒப்புதல் வழங்கக் கூடாது. கர்நாடகா மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் இன்னமும் தேவகவுடா மீது மரியாதையும் மதிப்பும் வைத்துள்ளனர்.

இப்ராஹிம்
இப்ராஹிம்ட்விட்டர்

’பாஜகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்பதுதான் எங்களது முடிவு’!

ஒரு தந்தை ஸ்தானத்தில் இருக்கும் தேவகவுடாவிடம் நாங்கள் கேட்பது, ‘பாஜகவுடன் கூட்டணி அமைக்கக் கூடாது; அதற்கு ஒப்புதல் தரக் கூடாது’ என்பதுதான். இது தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டு, அக்குழு தேவகவுடாவை நேரில் சந்தித்து இக்கருத்துகளை வலியுறுத்த உள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கர்நாடகா மாநில தலைவர் நான். கர்நாடகா மாநிலத்தில் கட்சியின் நலன் கருதி நான் முடிவெடுக்க அதிகாரம் உண்டு. பாஜகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்பதுதான் அந்த முடிவு. இந்த முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்ட ஒன்றுதான். இதற்குமேல் எதுவும் சொல்வதற்கு இல்லை. ஒருவேளை தேவகவுடாவும் குமாரசாமியும் பாஜகவுடன்தான் கூட்டணி அமைப்போம் என விரும்பி சென்றால் அவர்கள் போகட்டும். எங்களைப் பொறுத்தவரையில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கக் கூடாது, அவ்வளவுதான்” எனத் தெரிவித்துள்ளார்.

இப்ராஹிம், குமாரசாமி
நேற்று தீர்ப்பு.. இன்று நிச்சயதார்த்தம்: உச்சநீதிமன்றம் முன்பு மோதிரம் மாற்றிய தன்பாலின ஜோடி!

”எது தேவையோ அதை நாங்கள் சரிசெய்வோம்” - குமாரசாமி

இதுகுறித்து இன்று கருத்து தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் குமாரசாமி, ”இப்ராஹிமின் அறிக்கைகளை நான் ஏன் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டும்? தயவுசெய்து அதுகுறித்த விஷயங்களை என்னிடம் விவாதிக்க வேண்டாம். இது, பதில் சொல்ல வேண்டிய விஷயமல்ல. எங்கள் கட்சி தலைவர்கள் முடிவு எடுப்பார்கள். எது தேவையோ அதை நாங்கள் சரிசெய்வோம்” என பதிலளித்துள்ளார்.

தேவகவுடா, குமாரசாமி
தேவகவுடா, குமாரசாமி

முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவரது மகன் குமாரசாமிக்கு எதிராக சி.எம்.இப்ராஹிம் போர்க்கொடி தூக்கியுள்ளதால் மஜதவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் மஜத மீண்டும் உடையும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சித்தராமையா
சித்தராமையா@siddaramaiah | Twitter

முன்பு, சித்தராமையாவால் உடைந்த மஜத

முன்னதாக, மதச்சார்பற்ற ஜனதா தளம் உருவானபோது, அக்கட்சிக்குத் தாவி, அதில் ஐக்கியமானவர் இன்றைய முதல்வர் சித்தராமையா. அப்போது மஜத, மாநில தலைவராகவும் பதவி வகித்தார் சித்தராமையா. ஒருகட்டத்தில், தேவகவுடாக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பாடு அக்கட்சியிலிருந்து விலகினார், சித்தராமையா. இதனால் அப்போதே மஜத உடைந்தது குறிப்பிடத்தக்கது. இதைவைத்தே, மீண்டும் மஜத உடையும் சூழல் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இப்ராஹிம், குமாரசாமி
நாளை ’லியோ’ ரிலீஸ்.. சென்னை ரோகிணியில் டிக்கெட்டுக்காகக் குவிந்த ரசிகர்கள்.. போலீஸ் தடியடி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com