நேற்று தீர்ப்பு.. இன்று நிச்சயதார்த்தம்: உச்சநீதிமன்றம் முன்பு மோதிரம் மாற்றிய தன்பாலின ஜோடி!

தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என நேற்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியான நிலையில், தன்பாலின ஈர்ப்பாளர்களும் வழக்கறிஞர்களுமான ஒரு இணையர், உச்சநீதிமன்றம் முன்பே இன்று நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ளனர்.
அனன்யா கோடியா, உத்கர்ஷ் சக்சேனா
அனன்யா கோடியா, உத்கர்ஷ் சக்சேனாட்விட்டர்

தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பு தன்பாலின ஈர்ப்பாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

அனன்யா கோடியா, உத்கர்ஷ் சக்சேனா
“தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை” - உச்சநீதிமன்றம்

இந்த நிலையில், தன்பாலின ஈர்ப்பாளர்களும் வழக்கறிஞர்களுமான அனன்யா கோட்டியாவும், உத்கர்ஷ் சக்சேனாவும் இன்று உச்சநீதிமன்றத்தின் முன்பு மோதிரம் மாற்றி, தாங்கள் நிச்சயம் செய்துகொண்டுள்ளாதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பான படங்களை அவர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இது, இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனன்யா கோடியா வெளியிட்டுள்ள பதிவில், “நேற்று வருத்தத்திற்கு உள்ளானோம். இன்று உத்கர்ஷ் சக்சேனாவும் நானும் நீதிமன்றம் சென்றோம். எங்கள் உரிமை மறுக்கப்பட்ட இடத்தில், நாங்கள் மோதிரம் மாற்றிக்கொண்டோம். அதனால், இந்த வாரம் சட்ட இழப்பு மட்டுமில்லாமல், எங்கள் நிச்சயதார்த்தமும் நடந்த வாரம். நாங்கள் மீண்டும் போராடுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: ராஜஸ்தான்: சில்லறை மூட்டையுடன் ஐபோன் வாங்க சென்ற பிச்சைக்காரர் (!)...!

நேற்றைய தீர்ப்பு விவரம்:

பல்வேறு நாடுகளில் தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து நேற்று (அக்..17) தீர்ப்பு வழங்கியது. அப்போது இவ்வழக்கில் 4 விதமான தீர்ப்புகள் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக, தன்பாலின ஜோடிகள் திருமணம் செய்து கொள்வதற்கு அடிப்படை உரிமை இல்லை என்று ஐந்து நீதிபதிகளும் ஒப்புக்கொண்டனர். தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கு எதிராக 3:2 என்ற விகிதத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதேசமயம், ‘சிறப்பு திருமண சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டுமா என்பதை நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். அனைவருமே அவரவர் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க அரசியலமைப்பு உரிமை வழங்குகிறது.

தன் பாலித்தனவர்கள்
தன் பாலித்தனவர்கள்

எனவே, தன்பாலின ஈர்ப்பாளர்களிடம் அரசு பாகுபாடு காட்டக்கூடாது’ என தீர்ப்பு வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பு தன்பாலின ஈர்ப்பாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில்தான் தன்பாலின ஈர்ப்பாளர்கள் இருவர் உச்ச நீதிமன்றம் முன்பு நிச்சயதார்த்தம் செய்துகொண்டது வைரலாகி வருகிறது.

அனன்யா கோடியா, உத்கர்ஷ் சக்சேனா
“தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை” - உச்சநீதிமன்றம்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com