பெண்ணிடம் மைக்கை பறித்த சித்தராமையா - வைரலாகும் வீடியோ

பெண்ணிடம் மைக்கை பறித்த சித்தராமையா - வைரலாகும் வீடியோ

பெண்ணிடம் மைக்கை பறித்த சித்தராமையா - வைரலாகும் வீடியோ
Published on

காங்கிரஸ் கட்சியின் பெண் நிர்வாகியின் கையிலிருந்த மைக்கை முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா பறித்த வீடியோ பரவி வருகிறது.

கர்நாடக மாநிலத்தின் மைசூருவில் நடைபெற்ற குறைதீர்ப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சித்தராமையாவிடம் பெண் ஒருவர் ஆவேசமாக வாதிட்டார். இதனால், கோபமுற்ற சித்தராமை‌யா அப்பெ‌ண்ணிடம் இருந்து மைக்கைப் பிடுங்கினார். அப்போது அந்தப் பெண் உடுத்தியிருந்த ஆடையும் சற்றே கலைந்தது. இதைத் தொடர்ந்து அப்பெண்ணின் தோளில் தட்டி சித்தராமையா அமர வைத்தார். 

அவரது இந்த செயலுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் பெண்ணிடம் அத்துமீறிய செயலுக்காக சித்தராமைய்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என பாரதிய ஜனதா வலியுறுத்தியுள்ளது. பெண்ணை அவமதித்த சித்தராமையா மீது ராகுல் காந்தி எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கேள்வி எழுப்பியுள்ளார். கட்சியில் ‌உள்ள ஒரு குடும்பத்தை சேர்ந்த பெண்களை மட்டுமே காங்கிரஸ் கட்சியினர் மதிப்பார்கள் என்றும் ஜவடேகர் சாடியுள்ளார். இதற்கிடையில் இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்த கர்நாடக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணை‌யம் கடிதம் எழுதியுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com