உயிரிழப்பு, மாதிரிப்படம்
உயிரிழப்பு, மாதிரிப்படம்pt web

கர்நாடகா | 3-ம் வகுப்பு சிறுமிக்கு மாரடைப்பு.. பள்ளி வளாகத்திலேயே உயிரிழந்த சோகம்!

கர்நாடகாவில் பள்ளி ஒன்றில் 3 ஆம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

கடந்தாண்டு டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் ஒரு செய்தி பரவலாகப் பேசப்பட்டது. அதாவது, உத்தரபிரதேசத்தில் மட்டும் அந்த குறிப்பிட்ட 25 நாட்களுக்குள் 5 பேர் மாரடைப்பால் மரணமடைந்தனர் என்றும் அதில் 2 பேர் குழந்தைகள் என்று என்றும் தெரிவித்தது அந்த செய்தி. அதற்கு முன்பும் கூட, விளையாடிக் கொண்டிருந்தவர் திடீரென மாரடைப்பால் மரணம், ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர் மாரடைப்பால் மரணம், நடனமாடிக் கொண்டிருந்தவர் மாரடைப்பால் மரணம் என்பன போன்ற செய்திகள் அடிக்கடி வந்து சோகத்தை ஏற்படுத்தும்.

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஒரு செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தும்படியாக வந்துள்ளது. அதாவது, கர்நாடகாவில் பள்ளி ஒன்றில் 3 ஆம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து 175 கிமீ தொலைவில் அமைந்துள்ளது சாம்ராஜ்நகர். இங்குள்ள தனியார் பள்ளியில் தேஜஸ்வினி என்ற 8 வயது சிறுமி மூன்றாம் வகுப்பில் பயின்று வந்துள்ளார். இவர் தனது சக மாணவர்களுடன் பள்ளி வளாக கார்டனில் நின்று கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை அடுத்து பள்ளி ஊழியர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில் மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், இறப்பிற்கு காரணம் மாரடைப்பு என்றும் தெரிவித்துள்ளனர்.

உயிரிழப்பு, மாதிரிப்படம்
வீடியோ | பயிற்சியின் போது பயங்கர விபத்து.. நொறுங்கியது காரின் முன்பகுதி - காயமின்றி தப்பிய அஜித்!

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கல்வி அலுவலர் ஹனுமந்தஷெட்டி பள்ளி ஊழியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரித்தார். பள்ளி முதல்வரும் மாணவியின் மரணத்திற்கு இரங்கலைத் தெரிவித்துள்ளார். மாணவிக்கு இதற்கு முன்னாள் இதுபோல் நடந்தது இல்லை என்றும் அவர் மிகவும் சுறுசுறுப்பான மாணவியாகத்தான் இருந்து வந்ததாகவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் லக்னோவிலுள்ள மான்ட்ஃபோர்ட் பள்ளியில், வளாகத்தில் விளையாடிக்கொண்டிருந்த 9 வயது மாணவி மயங்கி விழுந்தார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

உயிரிழப்பு, மாதிரிப்படம்
"ஆஸ்திரேலியாவை எப்படி வீழ்த்துவதென எங்களுக்கு தெரியும்.." WTC ஃபைனல் குறித்து எச்சரித்த ரபடா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com