பாஜகவை பின்னுக்கு இழுக்கிறாரா? - அண்ணாமலை Vs தமிழிசை + சீனியர்ஸ்.. முற்றும் மோதல்; பின்னணி என்ன?

பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் சீனியர்களுக்கும் இடையிலான மோதலும் தற்போது வெளிப்படையாக நடக்க ஆரம்பித்திருக்கிறது. அப்படி என்ன மோதல் விரிவாக பார்க்கலாம்...
தமிழிசை - அண்ணாமலை
தமிழிசை - அண்ணாமலைpt web

பாஜக சீனியர் vs ஜூனியர் கருத்து மோதல்

“கட்சியில் குற்றப் பின்னணி உடையவர்களுக்கு பதவிகள் தருகிறார்கள்,,,வார் ரூம் மூலம் சொந்தக் கட்சி நிர்வாகிகளையே சமூக வலைதளங்களில் அச்சுறுத்தலுக்கு ஆளாக்குகிறார்கள்” என இதுவரை பாஜகவைவிட்டு வெளியேறும் நிர்வாகிகளிடம் இருந்து வெளிப்பட்ட குரல், இப்போது பாஜகவில் அங்கம் வகிக்கும் நிர்வாகிகளிடமிருந்தே ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது... தவிர, அதிமுகவுடனான கூட்டணி குறித்தும் பாஜக தலைமைக்கும் மற்ற சீனியர் நிர்வாகிகளுக்குமிடையே கருத்து மோதல் உண்டாகியுள்ளது..,

#BREAKING | இபிஎஸ்- வேலுமணி இடையே பிரச்சனை இருக்கலாம்: அண்ணாமலை
#BREAKING | இபிஎஸ்- வேலுமணி இடையே பிரச்சனை இருக்கலாம்: அண்ணாமலை

கோவையில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடந்த ஆறாம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “அண்ணாமலை குறித்து பேசக்கூடாது என இருந்தோம். அண்ணாமலை அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்களை அதிகமாக ஏசியுள்ளார். அதுமட்டுமின்றி அண்ணா, ஜெயலலிதா, எடப்பாடியாரை பற்றியும் அதிகமாக பேசினார். எனவே, கூட்டணி கலைய அண்ணாமலைதான் காரணம். ஒருவேளை கூட்டணி இருந்திருந்தால் 30, 35 சீட் கிடைத்திருக்கும்” என கருத்துத் தெரிவித்திருந்தார்..,

தமிழிசை - அண்ணாமலை
மணிப்பூர் | முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல்.. ஒருவர் காயம்!

”கூட்டணி சகோதரர் அண்ணாமலைக்கு அதில் விருப்பம் இல்லை” தமிழிசை

அண்ணாமலை
அண்ணாமலை@annamalai_k

இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேட்டபோது, “அதிமுகவும் பாஜகவும் ஒன்றாக இருந்தால் 35ல் வெற்றி பெற்றிருப்போம் என்று வேலுமணி கூறுகிறார். தனியாக இருந்த போது ஒரு சீட்டு கூட அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. மக்கள் மூன்று அணியை பார்த்துவிட்டு வாக்களித்து இருக்கின்றனர். அதிமுக தலைவர்கள், இவ்வளவு நாட்களாக நிர்ப்பந்திக்கப்பட்டு பாஜகவிற்கு ஆதரவு கொடுத்தோம் என்று சொன்னார்கள். இப்போது முன்னாள் அமைச்சர் வேலுமணியின் பேட்டியைப் பார்க்கும் பொழுது, அவருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே உட்கட்சி பிரச்சினை இருப்பது போல தெரிகிறது” என காட்டமாக பதிலளித்தார்..,

ஆனால், வேலுமணியின் கருத்தை, பாஜக முன்னாள் தலைவர் தமிழிசையும் ஆமோதித்துப் பேசினார்.., அதுமட்டுமில்லாமல், “கூட்டணி வைக்கலாம் என்று நாங்கள் வியூகத்தை அமைத்தோம்.. சகோதரர் அண்ணாமலைக்கு அதில் விருப்பம் இல்லை. அதனால் செய்யவில்லை” எனவும் கருத்துத் தெரிவித்திருந்தார்..,

தமிழிசை - அண்ணாமலை
“தமிழக மக்களுக்கு மோடி அரசு இனியாவது நல்லது செய்யுமா?” - செல்லூர் ராஜூ கேள்வி!

”நானே கவலைப்படவில்லை.. உங்களுக்கு என்ன?” தமிழிசை

தமிழிசையின் இந்தக் கருத்துக்கு அண்ணாமலை ஆதரவு பாஜக நிர்வாகிகள் இணையதளங்களில் கடுமையான எதிர்வினையை வெளிப்படுத்தினர், தமிழிசையை வட இந்தியாவுக்கு ஆளுநராக அனுப்புங்கள் எனவும் விமர்சனம் செய்தனர்.., அதுகுறித்துப் பேசிய தமிழிசை சௌந்தராரஜன், “கட்சிக்காக கடுமையாக உழைக்க கூடியவர்கள். நான் மற்ற கட்சி நிர்வாகிகளை மட்டுமல்ல, உட்கட்சி ஐடி நிர்வாகிகளையும் எதிர்க்கிறேன். எச்சரிக்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்து சொன்னால் அவர்களை மோசமாக பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் குறித்து தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிக்கிறேன். நான் இங்கேதான் இருப்பேன்” என எச்சரிக்கை செய்திருந்தார்.

தமிழிசை
தமிழிசைபுதிய தலைமுறை

ஆளுநர் பதவி குறித்துப் பேசிய தமிழிசை, “நான் இங்கேதான் இருப்பேன். ஆளுநர் பணியை விட்டு நான் ஏன் இங்கே பணிகளை செய்கிறேன் என்றும் சிலர் அப்படி இப்படி பேசுகிறார்கள். கட்சியினருக்கே கேட்கிறேன். ஆளுநர் பணியை விட்டு விட்டு வந்ததற்கு நானே கவலைப்படவில்லை. உங்களுக்கு என்ன கவலை?” எனவும் காட்டமாகப் பதிலளித்திருந்தார்..,

நிர்வாகிகள் சொன்னதென்ன?

தமிழிசைக்கு ஆதரவாக அறிவுசார் பிரிவு மாநில தலைவர் கல்யாணராமனும் கருத்துத் தெரிவித்திருந்தார்.., “தேர்தல் தோல்வி தொடர்பாக தமிழிசை, அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறியது சரியானது. பொய் சொல்வது அண்ணாமலை ரத்தத்திலேயே ஊறிவிட்டது. பெரிய தலைவராக காட்டிக்கொள்ளவே எடப்பாடிக்கு எதிரான அரசியலை அண்ணாமலை செய்கிறார். அண்ணாமலையை முன்னிலைப்படுத்த, பிற பாஜக தலைவர்களை சிறுமைப்படுத்த 2 வார் ரூம்கள் செயல்படுகின்றன. அண்ணாமலை வார் ரூமை நிர்வகிப்போரில் ஒருவர் ED வழக்குகளில் தொடர்புடையோரை மிரட்டி பணம் பறித்து வருகிறார். தங்கக் கடத்தல்காரர்கள், ரூ.1,000 கோடிக்கு மேல் மோசடி செய்தோரிடம் வார் ரூம் மூலம் பணம் பறிக்கின்றனர்,” எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.. அவருக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் கடுமையான கருத்துக்களை அண்ணாமலை ஆதரவு பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்..,

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

அதேபோல, “நம் எதிரி யார் என்பதை நாம் முதலில் முடிவு செய்யவேண்டும்.., நம் எதிரி திமுகதான் என மறைமுகமாக, அண்ணாமலையின் செயல்பாடுகளுக்கு எதிராக கருத்துத் தெரிவித்திருந்தார்” பொதுச் செயலாளரான இராம இராம.சீனிவாசன்

தமிழிசை - அண்ணாமலை
சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு பெற்றார் இந்திய ஜாம்பவான் சுனில் சேத்ரி!

இந்தநிலையில், ’எந்தக் கருத்தாக இருந்தாலும் கட்சிக்குள்தான் தெரிவிக்க வேண்டும்.. மீடியாக்களில் அல்ல’ என அண்ணாமலைக்கு ஆதரவாக பாஜக பொதுச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்தார்.

இது ஒருபுறமிருக்க, கட்சியில் சமூக விரோதிகளை அதிகளவில் சேர்த்து அவர்களுக்குப் பொறுப்பு கொடுத்திருப்பதாகவும் தான் தலைவராக இருந்தபோது கட்சிக்காக உழைத்தவர்களுக்கே பொறுப்புகளை வழங்கினேன் என தமிழிசை ஒரு நேர்காணலில் கருத்துத் தெரிவித்திருந்ததும் மிகப்பெரிய சர்ச்சையை பாஜகவுக்குள் மீண்டும் உண்டாக்கியிருக்கிறது.

”அண்ணனின் அன்புக்காக மட்டுமே உள்ளோம்”  திருச்சி சூர்யா சிவா

அதற்கு அண்ணாமலையின் ஆதரவாளராக அறியப்படும் திருச்சி சூர்யா சிவா, “தேசியத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற பாடம் எடுக்கக்கூடிய தாங்கள் ஒரு முன்னாள் மாநிலத் தலைவர். பொது ஊடகங்களில் இப்படி கருத்து பதிவிடுவது சரியா? குற்ற பின்னணி உள்ளவர்கள் பாஜவில் சேர்க்கப்பட்டது என்பது தங்களுடைய பரிந்துரையில் மாநிலத் தலைவர் ஆக்கப்பட்ட எல்.முருகன் காலகட்டத்தில்தான். வேண்டுமென்றால் நான் பட்டியல் தருகிறேன். கட்சியின் வளர்ச்சியையும், தனி நபருக்கு கிடைக்கும் புகழையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இப்படி புலம்புகிறீர்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது. தாங்கள் மாநில தலைவராக இருந்தபோது கட்சியில் சேர்வதற்கு கூட ஆட்கள் முன்வரவில்லை என்பதே நிதர்சனம். அதிமுக கூட்டணி இருந்திருந்தால் அதிகம் இடங்கள் ஜெயித்திருக்கும் என்று தேசியத்தின் முடிவுக்கு எதிரான உங்கள் கருத்து கட்சி கட்டுப்பாடா? பாஜவுக்குள் தேர்தல் நிதிகள் சரியாக போய் சேரவில்லை என்ற பொதுத்தளத்தில் நீங்கள் பேசிய பிறகுதான் இன்று தமிழ்நாடு முழுவதும் அது பேசும் பொருளாகியது. இது கட்சி கட்டுப்பாடா? இப்படி எல்லாம் கட்டுப்படாத முன்னாள் மாநில தலைவரின் கருத்திற்கு அமைதி காக்கும் தேசியம் அதற்கு எதிர் வினையாற்றும். எங்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அதை சந்திக்க தயாராக உள்ளோம். பதவிக்காக நாங்கள் இந்த கட்சியில் இல்லை. அண்ணனின் அன்புக்காக மட்டுமே உள்ளோம்'' தன்னுடைய எக்ஸ் தளத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார்..,

காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராம்PT Desk

காயத்ரி ரகுராம், சி.ஐ.டி,நிர்மல் குமார் என பாஜகவில் இருந்து வெளியேறிய பலர் இதுவரை பாஜக தலைவர் அண்ணாமலை மீது முன்வைத்த குற்றச்சாட்டுகளை, தற்போது கட்சியில் இருக்கும் மூத்த நிர்வாகிகளே முன்வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்... அதுவும் வெளிப்படையாக. அதேபோல, அண்ணாமலைக்கு ஆதரவாகவும் நிர்வாகிகள் வெளிப்படையாக கருத்துத் தெரிவிக்க ஆரம்பித்திருக்கின்றனர்..

பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் சீனியர்களுக்கும் இடையிலான மோதலும் தற்போது வெளிப்படையாக நடக்க ஆரம்பித்திருக்கிறது..,

தமிழிசை - அண்ணாமலை
‘ஒவ்வொரு ரன்னும், ஒவ்வொரு பந்தும் முக்கியம் பிகிலு’ - IND vs PAK போட்டியில் ஆட்டம் காண்பித்த மைதானம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com