சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு பெற்றார் இந்திய ஜாம்பவான் சுனில் சேத்ரி!

2005ம் ஆண்டு முதல் முறையாக இந்திய அணிக்காகக் களமிறங்கிய இந்திய ஜாம்பவான் சுனில் சேத்ரி 39 வயதில் தற்போது ஓய்வு பெற்றிருக்கிறார். இந்த 20 ஆண்டுகளில் இந்தியாவுக்காக 94 கோல்கள் அடித்திருக்கிறார் சேத்ரி.
சுனில் சேத்ரி
சுனில் சேத்ரிpt web

இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக இருந்து வந்த ஜாம்பவான் சுனில் சேத்ரி சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச கால்பந்து அரங்கில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்.

2005ம் ஆண்டு முதல் முறையாக இந்திய அணிக்காகக் களமிறங்கிய அவர் 39 வயதில் தற்போது ஓய்வு பெற்றிருக்கிறார். இந்த 20 ஆண்டுகளில் இந்தியாவுக்காக 94 கோல்கள் அடித்திருக்கிறார் சேத்ரி.

ஏமாற்றத்தோடு முடிந்த கடைசிப் போட்டி

இந்திய அணிக்காக 151 போட்டிகள் விளையாடிய அவர், குவைத் அணிக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியோடுதான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். அதனால் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சுமார் 56,000 ரசிகர்கள் சால்ட் லேக் மைதானத்தில் கூட அந்தப் போட்டி நடந்தது. ஒரு வெற்றியோடு இந்திய கேப்டன் நல்லபடியாக வழியனுப்பி வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், இந்திய அணி எதிர்பார்த்தபடி ஆடவில்லை.

குவைத் வீரர்கள் அட்டாக், டிஃபன்ஸ் இரண்டிலும் சிறப்பாக செயல்பட, இந்திய அணியால் கோல் அடிக்க முடியவில்லை. எவ்வளவு முயற்சி செய்தும் கடைசி வரை இரு அணிகளாலும் கோலடிக்க முடியாததால், அந்த ஆட்டம் 0 - 0 என டிரா ஆனது. அதுமட்டுமல்லாமல் இந்திய அணி உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் அடுத்த கட்டத்துக்கு முன்னேறும் வாய்ப்பும் கேள்விக்குறி ஆனது. அதனால் அனைவருமே பெரும் விரக்திக்குள்ளாகினார்கள். சேத்ரியும் அவர் எதிர்பார்த்தது போல் வெளியேற முடியவில்லை. இருந்தாலும், இத்தனை காலம் இந்திய அணியின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்த அவரை ரசிகர்கள் கொண்டாடி பெருமிதப்படுத்தினர்.

சுனில் சேத்ரி
19 ஆண்டுகால கால்பந்து பயணம் - ஓய்வை அறிவித்த இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி

சேத்ரியின் கால்பந்து பயணம்

சேத்ரியின் கால்பந்து கரியர் 2001ல் தொடங்கியது. டெல்லியில் சேர்ந்த சிட்டி கிளப்பில் விளையாடிய அவர் டுராண்ட் கோப்பையில் அசத்த, பிரபல கால்பந்து கிளப்பான மோஹன் பகான் அவரை ஒப்பந்தம் செய்தது. அங்கிருந்து அவர் கால்பந்து கரியர் மேலே மேலே சென்று கொண்டே இருந்தது. 2004ம் ஆண்டு 19 வயதில் இந்தியா அண்டர் 20 அணிக்கு அறிமுகம் ஆன அவர், அதே ஆண்டு அண்டர் 23 அணிக்கும் தேர்வு செய்யப்பட்டார்.

அங்கிருந்து ஒரேயொரு வருடத்தில் சீனியர் அணிக்கும் விளையாடும் வாய்ப்பு பெற்றார். 2005 ஜூன் 12ம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக அறிமுகம் ஆன சேத்ரி, தன் அறிமுக போட்டியிலேயே கோலடித்து அசத்தினார். அப்போது முதல் அந்தப் பயணம் பிளாக்பஸ்டராகவே இருந்திருக்கிறது. இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் ஆடியவர் (151), அதிக கோல்கள் அடித்தவர் (94), அதிக ஹாட்ரிக் கோல்கள் அடித்தவர் (4) என பல்வேறு சாதனைகள் படைத்திருக்கிறார் சேத்ரி.

கேப்டன், லீடர், லெஜண்ட்

தொடர்ந்து இந்திய அணிக்காக அசத்திய சேத்ரி, 2012ம் ஆண்டு தேசிய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அணியை முன்னின்று சிறப்பாக வழிநடத்திய அவர், பல போட்டிகளில் தானாகவே வென்றும் கொடுத்திருக்கிறார். மிகவும் முக்கியமான தருணங்களில், இந்திய அணி பின்தங்கியிருக்கும் போது, தோல்வியைத் தவிர்க்க கோல் தேவை எனும்போது, வெற்றிக்கு ஒரு கோல் அவசியம் எனும்போது... கடினமான சூழ்நிலைகளில் எல்லாம் கோல் அடித்து அசத்தியிருக்கிறார் அவர். அதனால் இந்திய கால்பந்து ரசிகர்கள் அவரை 'கேப்டன், லீடர், லெஜண்ட்' என்று கொண்டாடுவது வழக்கம்.

சுனில் சேத்ரி
HBD Sunil Chhetri | கேப்டன், லீடர், லெஜண்ட்... ஹேப்பி பர்த்டே சுனில் சேத்ரி!

இத்தனை ஆண்டுகள் இந்திய கால்பந்தின் அடையாளமாக இருந்தவர் இப்போது ஓய்வு பெற்றிருப்பது மிகப் பெரிய இழப்புதான். ஈடு இணையற்ற அவரது இடத்தை, இந்திய அணி எப்படி நிரப்பப்போகிறது என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com