ராகுலுடன் நடைப்பயணம்..நேற்று வரை காங். ஆதரவு; திடீரென பாஜகவில் இணைந்த குத்துச்சண்டை வீரர் விஜேந்தர்!

பிரபல குத்துச்சண்டை வீரரான விஜேந்தர் சிங், காங்கிரஸிலிருந்து விலகி, இன்று பாஜகவில் இணைந்தார்.
விஜேந்தர் சிங்
விஜேந்தர் சிங்ட்விட்டர்

பாஜகவில் இணைந்த பிரபல குத்துச்சண்டை வீரர்

மக்களைச் சுட்டெரிக்கும் வெயில் ஒருபுறமிருக்க, மறுபுறம் அந்த வெயிலையும் பொருட்படுத்தாத மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. அதேநேரத்தில், இந்த மக்களவைத் தேர்தலை மையமாய் வைத்து ஒருசில கட்சி நிர்வாகிகளும் வேறு கட்சிகளில் இணைந்து வருகின்றனர். பாஜகவிலிருந்து படையெடுக்கும் சிலருக்கு மத்தியில், வேறு கட்சிகளிலிருந்து அந்தக் கட்சிக்கு வருகை தருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, இன்று (ஏப்ரல் 3) பாஜகவில் இணைந்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்த விஜேந்தர் சிங், அந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தெர்தலில் தெற்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார். ஆனாலும் அந்த தேர்தலில் பாஜகவின் ரமேஷ் பிதுரியிடம் தோல்வியைத் தழுவினார். இந்த நிலையில்தான் அவர் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் ஐக்கியமாகி உள்ளார்.

இதையும் படிக்க: தொடரும் பட்டியல்: கட்சி மாறிய 4வது எம்.பி.. உத்தவ்தாக்கரே கட்சியில் ஐக்கியம்.. பாஜகவுக்கு பின்னடைவு?

விஜேந்தர் சிங்
பாஜகவில் இணைந்த சிவராஜ் பாட்டீல் மருமகள்.. மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்!

பாஜவில் இணைந்தது ஏன்? விஜேந்தர் சிங் விளக்கம்!

இதுகுறித்து அவர், “பாஜகவில் இணைந்தது எனது வீட்டுக்குத் திரும்பியது போன்ற உணர்வைத் தருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு தற்போது நாடு மற்றும் வெளிநாடுகளில் மரியாதை கிடைத்து வருவது பாராட்டுக்குரியது. நாம் முன்பு வெளிநாடு சென்று சண்டையிடும்போது இங்கிலாந்து, துபாய் என சில நேரங்களில் விமான நிலையங்களில் சில சம்பவங்கள் நடக்கும். ஆனால், மோடி அரசு ஆட்சிக்கு வந்தபிறகு விளையாட்டு வீரர்கள் எங்கு வேண்டுமானாலும் எளிதாக செல்ல முடிகிறது. ஆகையால், இந்த அரசாங்கத்தின் ஓர் அங்கமாக இருக்கவும், மக்களுக்கு உதவவும், அவர்களுக்கு சரியான பாதையைக் காட்டவும் விரும்புகிறேன்” என்றார்.

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் மீண்டும் பாஜக சார்பில் நடிகை ஹேமமாலினி களமிறக்கப்பட்டுள்ளார். அவரை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் வகுத்திருந்த திட்டம்தான் விஜேந்தர் சிங். ஆனால், என்னவோ தெரியவில்லை. திடீரென பாஜகவில் ஐக்கியமாகி உள்ளார். அவருக்கு சீட் மறுக்கப்பட்டதால் தான் பாஜவிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

விஜேந்தர் சிங் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர். இந்தச் சமூகத்தின் வாக்குகள் ஹரியானா மற்றும் மேற்கு உ.பி.யில் அதிகமுள்ளன. அந்தவகையில், விஜேந்தர் சிங்கை பாஜக வளைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதிகளில் பாஜகவுக்காக தீவிர பிரசாரம் செய்யும் விஜேந்தர் சிங், அச்சமூக மக்களின் ஒட்டுமொத்த வாக்குகளை அறுவடை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே சிட்டிங் எம்பியாக இருக்கும் ஹேமமாலினிக்கும் விஜேந்தர் சிங்கின் வருகை பலமாகப் பார்க்கப்படுகிறது.

டெல்லி: சிறையில் கெஜ்ரிவால்..மனைவி சுனிதா உடன் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் திடீர் ஆலோசனை! அடுத்து என்ன?

விஜேந்தர் சிங்
பாஜகவில் இணைந்த கருணாஸ் படநடிகை: அமராவதியில் மீண்டும் போட்டி..வலுக்கும்எதிர்ப்பு! நவ்நீத் ராணா யார்?

யார் இந்த விஜேந்தர் சிங்?

ஹரியானா மாநிலம் பிவானியைச் சேர்ந்தவரான விஜேந்தர் சிங், 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற முதல் இந்திய குத்துச்சண்டை வீரர் ஆவார். 2006 மற்றும் 2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களையும், 2009 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார். அர்ஜுனா, பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

மல்யுத்த வீரர்களான வினேஷ் போகட், சாக்‌ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் (WFI) தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் மீது பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக குற்றச்சாட்டு அளித்திருந்தனர். இதுதொடர்பான போராட்டத்திற்கு ஆதரவு அளித்தவர்களில் விஜேந்தர் சிங்கும் ஒருவர். மேலும் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய உதவியாளர் WFI தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக சாக்‌ஷி மாலிக் அறிவித்தார். அப்போது இதுகுறித்து பேசிய விஜேந்தர் சிங்,விளையாட்டு வரலாற்றில் இது ஒரு கருப்பு நாள்’ எனக் கூறியிருந்தார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஹரியானாவின் கர்னாலில் நடந்த பாரத் ஜோடோ யாத்ராவின் முதல்கட்டத்தின்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் விஜேந்தர் சிங்கும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. ராகுல் காந்தியுடன் அவர் நடைப்பயணம் மேற்கொண்ட பல படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இன்னும் சொல்லப்போனால், கடந்த மார்ச் 31ஆம் தேதி, ”மக்களவைத் தேர்தலில் ’மேட்ச் பிக்சிங்’ மூலம் வெற்றிபெற்று அரசியலமைப்பை மாற்ற பிரதமர் மோடி விரும்புகிறார்” என ராகுல் காந்தி பதிவிட்டிருந்த ட்வீட்டை விஜேந்தர் சிங் மறுபதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அரவிந்த் கெஜ்ரிவாலின் ஐபோன் பாஸ்வேர்டு கேட்ட அமலாக்கத்துறை - கைவிரித்த ஆப்பிள் நிர்வாகம்!

விஜேந்தர் சிங்
"கேல் ரத்னா விருதை திருப்பியளிப்பேன்"-விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த விஜேந்தர் சிங் !

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com