பாஜகவில் இணைந்த சிவராஜ் பாட்டீல் மருமகள்.. மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்!

மகாராஷ்டிராவில் துணை முதல்வர் முன்னிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள் அர்ச்சனா பாட்டீல் இன்று பாஜ்கவில் இணைந்துள்ளார்.
அர்ச்சனா பாட்டீல்
அர்ச்சனா பாட்டீல்ட்விட்டர்

பாஜகவில் இணைந்த சிவராஜ் பாட்டீல் மருமகள்

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலால், அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. இதில் பலரும் கட்சித்தாவலில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் பெரும்பாலும் பாஜகவுக்கு பலரும் தாவி வருவது தொடர் செய்தியாக உள்ளது. ஆங்காங்கே, பாஜகவிலிருந்தும் சிலர் வேறு கட்சியில் இணைந்துவருகின்றனர். இன்னும் சிலரோ, கட்சியில் இருந்து மட்டுமல்லாது அரசியலுக்கும் முழுக்குப் போட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை முன்னாள் சபாநாயகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிவ்ராஜ் பாட்டீலின் மருமகள் அர்ச்சனா பாட்டீல் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் அர்ச்சனா இன்று பாஜகவில் இணைந்தார். அம்மாநிலத்தின் உட்கிர் பகுதியில் இயங்கிவரும் லைப்கேர் மருத்துவமனையின் தலைவராக அர்ச்சனா பாட்டீல் உள்ளார். இவரது கணவர் ஷைலேஷ் பாட்டீல், மராட்டிய மாநில காங்கிரஸ் கட்சி செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, சிவராஜ் பாட்டீலின் உதவியாளரும் முன்னாள் மாநில அமைச்சருமான பஸ்வராஜ் முரும்கருடன் சேர்ந்து பாஜகவில் சேர அர்ச்சனா பாட்டீல் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரது மகளின் திருமணத்தால் பஸ்வராஜ் திட்டத்தை ஒத்திவைத்தார்.

இதையும் படிக்க: வழக்கறிஞர் மீது பொய்வழக்கு: குஜராத் Ex IPS அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை.. நீதிமன்றம் அதிரடி!

அர்ச்சனா பாட்டீல்
மராத்தா இடஒதுக்கீடு மசோதா: மகாராஷ்டிரா சட்டசபையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றம்!

பாஜவில் இணைந்தது ஏன் என்பது குறித்து அர்ச்சனா பேட்டி!

பாஜகவில் இணைந்தது குறித்து அர்ச்சனா பாட்டீல், “அரசியலில் பணியாற்றுவதற்காக பாஜகவில் இணைந்துள்ளேன். பிரதமர் மோடி கொண்டுவந்த ’நாரி சக்தி வந்தன் ஆதினியம் சட்டம்’ என்னைப் பெரிதும் கவர்ந்தது. இது பெண்களுக்கு சமமான வாய்ப்பை வழங்குகிறது. நான் பாஜகவுடன் இணைந்து அடிமட்ட அளவில் பணியாற்றுவேன். நான் அதிகாரப்பூர்வமாக காங்கிரஸில் இருந்ததில்லை. பாஜகவின் கொள்கைகள் என்மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் பாஜகவில் சேர்ந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பாஜகவில் அர்ச்சனா பாட்டீல் இணைந்தது குறித்து துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், “அர்ச்சனா பாட்டீல் பா.ஜ.க.வில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது மிகப் பெரிய விஷயம். இது கட்சியை மேலும் பலப்படுத்தும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: சந்தேஷ்காலி பாஜக வேட்பாளர்: விமர்சிக்கும் திரிணாமுல் காங்கிரஸ்.. புகார் அளித்த ரேகா பத்ரா!

அர்ச்சனா பாட்டீல்
மகாராஷ்டிரா: பச்சைக்கொடி காட்டியது தேர்தல் ஆணையம் - அஜித் பவார் வசம் சென்றது தேசியவாத காங்கிரஸ்!

மகாராஷ்டிரா அரசியலும்... மக்களவைத் தேர்தலும்

மகாராஷ்டிராவில் பாஜக துணையுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டணியில்தான் அஜித் பவாரின் கட்சியும் உள்ளது. இதற்கு நேர் எதிரே உத்தவ் தாக்கரே சிவசேனா, காங்கிரஸ், சரத் பவார் கட்சி ஆகியன ’மகா விகாஸ் அகாடி’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துச் செயல்பட்டு வருகின்றன. எனினும் இந்த இரு கூட்டணிகளும் இன்னும் முழுமையாக மக்களவைத் தேர்தலுக்கு தொகுதிப் பங்கீட்டைப் பிரிக்கவில்லை. இருதரப்பிலும் இழுபறி நீடித்து வருகிறது.

ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே, சரத் ப்வார்
ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே, சரத் ப்வார்ட்விட்டர்

சுமுகப் பேச்சுவார்த்தை எட்டப்படாததால், உத்தவ் தாக்கரே சிவசேனா 16 தொகுதிகளுக்கும், பாஜக 20 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இரண்டு கட்சிகளும் கூட்டணி தர்மத்தை மீறி வேட்பாளர்களை அறிவித்திருப்பதால் இன்னும் இருதரப்பிலும் மோதல் முற்றியுள்ளது. 48 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதையும் படிக்க: கனடா கல்விக்கு 'NO' சொல்லும் இந்தியர்கள்.. 5 ஆண்டுகளில் 8% குறைந்த மாணவர் எண்ணிக்கை.. பின்னணி என்ன?

அர்ச்சனா பாட்டீல்
இரண்டாக பிளக்கப்பட்டுள்ள பவார் குடும்பம்; சரத்பவாருக்கு பின் அணிதிரளும் அஜித்பவார் குடும்பத்தினர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com