\
அமெரிக்காவிடம் ஜாவலின் ஏவுகணைகள் வாங்கும் இந்தியா
அமெரிக்காவிடம் ஜாவலின் ஏவுகணைகள் வாங்கும் இந்தியாai

இந்திய ராணுவத்தில் 100 ஜாவலின் ஏவுகணைகள்.. அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் இந்தியா!

அமெரிக்காவிடமிருந்து நவீன ஜாவலின் ஏவுகணைகளை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
Published on
Summary

இந்திய ராணுவம் அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன ஜாவலின் FGM-148 கவச வாகன எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க முடிவு செய்துள்ளது. 45 மில்லியன் டாலர் மதிப்பில் சுமார் 100 ஏவுகணைகள் வாங்கப்படுகின்றன. ஃபயர்-அண்ட்-ஃபர்கெட் தொழில்நுட்பம், அகச்சிவப்பு கதிர்வீச்சு சென்சார், இரவு மற்றும் மோசமான வானிலையிலும் துல்லிய தாக்குதல், டாங்கி கவசங்களை ஊடுருவும் திறன் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள்.

அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன 'ஜாவலின்' (Javelin FGM-148) கவச வாகன எதிர்ப்பு ஏவுகணைகளை இந்தியா வாங்க உள்ளது. 45 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பில் சுமார் 100 ஜாவலின் ஏவுகணைகள் வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவிடம் ஜாவலின் ஏவுகணைகள் வாங்கும் இந்தியா
நேபாள் அழிவை விட 100 மடங்கு அபாயம்.. சீனாவின் பேராசைக்கு பலியாகுமா இந்தியா? அதிர்ச்சி தகவல்!

ஜாவலின் ஏவுகணைகளின் சிறப்பு என்ன?

ஜாவலின் ஏவுகணை ஃபயர்-அண்ட்-ஃபர்கெட் (Fire and Forget) என்ற நவீன தொழில்நுட்பம் கொண்டது. பாரம்பரிய ஏவுகணைகளைப் போல இலக்கை தாக்கும் வரை வீரர் ஏவுகணையை கட்டுப்படுத்தத் தேவையில்லை. ஏவிய உடனே வீரர் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவோ மறைவிடத்திற்கு மாறவோ முடியும். ஏவுகணை இலக்கை தானாகவே தேடிச் சென்று அழிக்கும்.

javelin missile
javelin missile

அகச்சிவப்பு கதிர்வீச்சு (Thermal Signature) தொழில்நுட்பம் கொண்டுள்ளதால், இரவு மற்றும் மோசமான வானிலையிலும் இலக்கைத் துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும். டாங்கிகள் போன்ற நவீன கவச வாகனங்களில் உள்ள பாதுகாப்பு கவசங்களையும் (Explosive Reactive Armour) ஊடுருவித் தாக்கி அழிக்கும். ஜாவலின் ஏவுகணையை ஒரு ராணுவ வீரர் தோளில் சுமந்து சென்று எளிதில் இயக்க முடியும். போர்ச்சூழலில் கடினமான மலைப்பகுதிகளில் எதிரிகளின் கவச வாகனங்களை தாக்கி அழிக்க இந்திய ராணுவத்திற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

அமெரிக்காவிடம் ஜாவலின் ஏவுகணைகள் வாங்கும் இந்தியா
100 மடங்கு ஆகும் இந்தியா பலம்! ரபேஃலை மிஞ்சும் புதிய ஆயுதங்கள்! மாஸ் காட்டும் விமானப்படை!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com