100 மடங்கு ஆகும் இந்தியா பலம்! ரபேஃலை மிஞ்சும் புதிய ஆயுதங்கள்! மாஸ் காட்டும் விமானப்படை!
செய்தியாளர் - கார்த்திகேயன்
உலகிலேயே சக்திவாய்ந்த 4-வது ராணுவம் என்ற பெருமையையும், வீரர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 2-வது பெரிய ராணுவம் என்ற பெருமையையும் கொண்ட நாடு இந்தியா. ஒவ்வொரு நாளும் அதீத வளர்ச்சியை இந்திய பாதுகாப்புத்துறை பெற்று வருகிறது. குறிப்பாக, பிரான்ஸ் நாட்டின் உதவியுடன் ரஃபேல் போர் விமானங்களும், ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி கப்பல்களும் பெற்ற இந்திய பாதுகாப்புத்துறை, வலிமை மிகுந்ததாக மாற்றியுள்ளது.
இப்படியான சூழலில், பிரான்ஸ் நாட்டுடன் மீண்டும் இணைந்துள்ள இந்தியா, இந்த முறை 100 மடங்கு பலத்தை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதாவது, 6-வது ஜெனரேஷன் வான்வெளி தொழில்நுட்பங்களை உருவாக்கும் முயற்சியாக, FCAS என்ற திட்டத்தை இந்தியாவும், பிரான்ஸ் நாடும் முன்னெடுத்துள்ளது.
நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் சமர்ப்பித்த அறிக்கையில், இத்திட்டத்தில் இணைந்து செயல்பட தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் படி, வெறும் ஆயுதங்களை இறக்குமதி செய்வதற்கு பதிலாக, தொழில்நுட்பங்களை பகிர்ந்துக் கொள்வது, இணைந்து தயாரிப்பது, ஆராய்ச்சி செய்வது என அடுத்தகட்டத்திற்கு, இந்தியா-பிரான்ஸ் உறவு முன்னேறியுள்ளது.
இந்தியாவின் எதிர்கால போர் விமானங்களுக்கான உயர்-திறன் கொண்ட எஞ்சின்களை உருவாக்குவது குறித்து பிரான்சின் சப்ரான் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பிரான்ஸ் தலைமையிலான FCAS திட்டத்தில் இந்தியா இணைவது, ஸ்டெல்த் தொழில்நுட்பம், அதிநவீன சென்சார்கள், மின்னணு போர்முறை, செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆளில்லா விமான அமைப்புகள் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களைப் பெற வழிவகுக்கும்.
இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பான 5-வது தலைமுறை ஏ.எம்.சி.ஏ திட்டத்துடன் இணைந்து, இந்த சர்வதேச உறவு இந்திய விண்வெளித் துறைக்கு மிகப்பெரிய பலத்தைத் தரும். இந்த திட்டம் இந்தியாவை ஒரு வாடிக்கையாளராக மட்டுமல்லாமல், அதிநவீன விண்வெளித் தொழில்நுட்பங்களின் இணை-உற்பத்தியாளராக உலக அரங்கில் உயர்த்தியுள்ளது.

