HEADLINES | காவிரி படுகைக்கு Red Alert முதல் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள டித்வா புயல் வரை
இன்றைய தலைப்புச் செய்தியில் வடதமிழகம் நோக்கி நகரும் டித்வா புயலால் காவிரிப் படுகை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன், கர்நாடகாவில் தீவிரமெடுக்கும் முதல்வர் பதவிக்கான போட்டி, பாகிஸ்தான் சிறையில் இம்ரான்கான் கொடுமைப்படுத்தப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு செய்திகளை பார்க்கவிருக்கிறோம்.
சென்னையிலிருந்து 560 கிலோ மீட்டர் தொலைவில் டித்வா புயல்... 30ஆம் தேதி சென்னைக்கு அருகே வரும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு...
காவிரிப் படுகை மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்.. ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என கணிப்பு...
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்... வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு...
செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை அதிகனமழை எச்சரிக்கை... சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்...
வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள டித்வா புயல் காரணமாக ராமேஸ்வரம், காரைக்கால் பகுதிகளில் கடல் சீற்றம்... பலத்த காற்றுடன் கனமழை பெய்வதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்...
டித்வா புயல் எதிரொலியாக தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்... மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் அறிவுறுத்தல்...
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை... மாவட்ட ஆட்சியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என உத்தரவு...
அதிகனமழை எச்சரிக்கை எதிரொலியாக புதுச்சேரி, காரைக்காலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்... மழை தொடர்பான பாதிப்புகளை தெரியப்படுத்த தொலைபேசி எண்கள் அறிவிப்பு...
இலங்கையில் கனமழை, நிலச்சரிவால் இயல்பு வாழ்க்கை முடக்கம்... 11 நாட்களில் 47 பேர் உயிரிழப்பு... நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு...
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்... சென்னை பனையூரில் விஜய் முன்னிலையில் கட்சியில் ஐக்கியம்...
இருபெரும் தலைவர்களின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் செங்கோட்டையன் என விஜய் வீடியோ... மக்கள் பணியாற்ற இணைந்து செயல்பட வரவேற்பதாகவும் பேச்சு...
தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு பதவியை அறிவித்தார் கட்சித் தலைவர் விஜய்... மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம்...
2026இல் மாபெரும் புரட்சி உண்டாகி விஜய் வெற்றி பெறுவார்... அதிமுகவை ஒன்றிணைக்க இயலவில்லை என்றும் செங்கோட்டையன் பேட்டி...
தவெகவில் செங்கோட்டையன் இணைந்தது பற்றி எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி... அதிமுகவில் இல்லாதவர் பற்றி பதில்சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என பழனிசாமி பதில்..
செங்கோட்டையன் தவெகவிற்கு சென்றதால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என நயினார் நாகேந்திரன் விளக்கம்.. கட்சியிலிருந்து ஒருவர் வெளியேறினால் அவருடன் வாக்கு வங்கியும் சென்றுவிடுமா என்றும் கேள்வி...
செல்வாக்கு இல்லாத செங்கோட்டையன் தவெகவுக்குச் சென்றதால் திமுகவுக்கு பாதிப்பில்லை... எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிடவிட முடியாது என்றும் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி...
தமிழகத்தில் அதிமுகவை பலவீனப்படுத்தி 2ஆவது இடத்திற்கு வர வேண்டும் என்பதே பாஜகவின் ஆசை... தவெகவில் செங்கோட்டையன் இணைந்தது குறித்து மதிமுக முதன்மைச் செயலர் துரைவைகோ கருத்து...
தமிழக அரசியலில் நடக்கும் ஒவ்வொரு நகர்விலும் பா.ஜ.க.வின் கைகள் உள்ளதாக திருமாவளவன் கருத்து... தவெக தனித்துவமாக இயங்க வேண்டும் என்பதே தனது ஆசை எனவும் பேட்டி...
திருவண்ணாமலை தீபத்திருவிழா 4ஆம் நாள் உற்சவம்... கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த அண்ணாமலையார்...
எஸ்ஐஆர் படிவத்தில் உறவினர் பெயர் கட்டாயமில்லை என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்... தெரிந்த விவரங்களை பூர்த்தி செய்து தந்தாலும் பெயர் இடம்பெறும் என அர்ச்சனா பட்நாயக் விளக்கம்...
சென்னை போரூரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கு... தஷ்வந்த் விடுதலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்...
இந்தோனேசியாவில் பெருமழை, நிலச்சரிவால் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு... சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம்...
ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83ஆக உயர்வு... விபத்து தொடர்பாக கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த 3 பேர் கைது...
பாகிஸ்தான் சிறையில் இம்ரான்கான் சித்ரவதை அனுபவிப்பதாக அவரது சகோதரி கடும் குற்றச்சாட்டு... 4 வாரங்களாக இம்ரான்கானை தொடர்புக் கொள்ள முடியவில்லை எனவும் வேதனை...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்தது... ஒரு சவரன் 94 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை...
சென்னையில் வெள்ளி விலை கிலோவுக்கு 4,000 ரூபாய் உயர்ந்தது... ஒரு கிராம் வெள்ளி 180 ரூபாயாக அதிகரிப்பு..
பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலாவின் காலில் விழுந்த நடிகர் ரஜினிகாந்த்... கலாச்சார மேன்மைக்கான திருமதி ஒய். ஜி.பி. விருதை வழங்கி ஆசி பெற்றார்...

