Rajinikanth, Vijay Sethupathi, LIK
Rajinikanth, Vijay Sethupathi, LIKJailer 2

`ஜெயிலர் 2'வில் VJS to நிவின் பாலியின் வெப் சீரிஸ் | இன்றைய டாப் 10 சினிமா செய்திகள் | Jailer 2

இன்றைய சினிமா செய்திகளில் ஜெயிலர் 2வில் விஜய் சேதுபதி, `LIK', `வா வாத்தியார்' படங்களின் புதிய பாடல்கள் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளன.

1. `ஜெயிலர் 2'வில் விஜய் சேதுபதி?

Jailer 2
Jailer 2

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் `ஜெயிலர் 2' படத்தில் விஜய் சேதுபதி நடிக்கப்போவதாக தகவல். இதற்கு முன் பேட்ட படத்தில் விஜய் சேதுபதி ரஜினியுடன் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

2. `வா வாத்தியார்' படத்தின் புதிய பாடல்!

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள `வா வாத்தியார்' படத்திலிருந்து Aalapikkey Ummak பாடல் வெளியீடு.

3. LIK Second Punch

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி நடித்துள்ள `LIK' படத்தின் இரண்டாவது சிங்கிளாக `பட்டுமா' பாடல் வெளியீடு.

Rajinikanth, Vijay Sethupathi, LIK
"நானும் தவறு செய்திருக்கிறேன்" - அஞ்சான் ட்ரோல் பற்றி மனம் திறந்த லிங்குசாமி | Anjaan | Lingusamy

4. `லாக்டவுன்' பட டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள `லாக்டவுன்' படத்தின் டிரெய்லர் வெளியீடு. இப்படம் டிசம்பர் 5ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

5. விஜய் மில்டனின் Gods & Soldiers

விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள Gods & Soldiers படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு. இந்தப் படத்தின் மூலம் தெலுங்கு நடிகர் ராஜ் தருண் தமிழில் அறிமுகமாகிறார். சுனில், பரத், ஆரி, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளார்.

6. ஹீரோவான மகேஷ்பாபுவின் அண்ணன் மகன்

Srinivasa Mangapuram
Srinivasa Mangapuram

`RX 100', `மங்களவாரம்' படங்களை இயக்கிய அஜய் பூபதி, மகேஷ்பாபுவின் அண்ணன் ரமேஷ்பாபுவின் மகன் ஜெய கிருஷ்ணா இயக்கும் படத்திற்கு `ஸ்ரீனிவாச மங்கபுரம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் மூலம் ரவீனா டாண்டன் மகள் ராஷா தடானி தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார்.

Rajinikanth, Vijay Sethupathi, LIK
தனுஷின் `Tere Ishk Mein' முதல் கீர்த்தியின் `ரிவால்வர் ரீட்டா' வரை இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ்

7. வெப் சீரிஸில் நிவின் பாலி!

நிவின் பாலி நடிப்பில் அருண் இயக்கியுள்ள வெப் சீரிஸ் `Pharma'. இதன் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது.

8. ராதிகா ஆப்தே, அனுராக் காஷ்யப் நடித்துள்ள `Saali Mohabbat'

நடிகை டிஸ்கா சோப்ரா இயக்குநராக அறிமுகமாகும் படம் `Saali Mohabbat'. ராதிகா ஆப்தே, அனுராக் காஷ்யப் நடித்துள்ள இந்தப் படம் டிசம்பர் 12ம் தேதி ஸீ5 தளத்தில் வெளியாகிறது.

9. `Tumbbad' இயக்குநரின் அடுத்த படம்

Mayasabha
Mayasabha

`Tumbbad' படம் மூலம் கவனம் ஈர்த்த ராஹி அணில் இயக்கியுள்ள அடுத்த படம் `Mayasabha' ஜனவரி 16ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு.

10. உருவாகிறது `Rush Hour 4'

Rush Hour 4
Rush Hour 4

ஜாக்கி சான் (Jackie Chan), கிறிஸ் டுக்கர் (Chris Tucker) நடிப்பில் பிரெட் ராட்னர் (Brett Ratner) மூன்று பாகங்களாக இயக்கிய படம் `Rush Hour'. இந்தப் படத்தின் 4வது பாகம் விரைவில் இதே கூட்டணியில் உருவாக உள்ளதாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com