“சாதனை அளவை எட்டும் வகையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும்” - பிரதமர் மோடி வேண்டுகோள்

"சாதனை அளவை எட்டும் வகையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும்" - என பிரதமர் மோடி வேண்டுகோள்
பிரதமர் மோடி
பிரதமர் மோடிமுகநூல்

நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 40 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 102 மக்களவை தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியது.

முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கவும்: மோடி
முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கவும்: மோடி

இந்நிலையில், தனது சமூல வலைதளப்பக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில், “2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது! 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளதால், அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

சாதனை அளவை எட்டும் வகையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com