ஜிஎஸ்டி வரியால் பயிற்சி மையங்களின் கட்டணம் உயரும் அபாயம்! அச்சத்தில் பெற்றோர்கள்
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிகளில் மிகப்பெரிய மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, பள்ளி, கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அதேநேரம், நீட், ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வு பயிற்சி மையங்களுக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரி நிர்ணயிக்கப்பட்டது. இதன்காரணமாக போட்டித் தேர்வு பயிற்சி மையங்களின் கட்டணம் உயரும் என கூறப்படுகிறது.
அதாவது, பயிற்சி நிறுவன மையங்களின்கட்டணம் 50 ஆயிரம் ரூபாயாகஇருந்தால், 18 விழுக்காடு ஜிஎஸ்டிவரிவிதிப்பால், இனிமேல் 59 ஆயிரம்ரூபாயாக உயரும் எனகணிக்கப்பட்டுள்ளது. இந்த 18விழுக்காடு வரி பயிற்சி மையங்களுக்குமட்டுமல்ல, கல்வி தொழில்நுட்பநிறுவனங்கள், தனியார் ஆசிரியர்கள்நடத்தும் ஆன்லைன் வகுப்புகளுக்கும்பொருந்தும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களை கல்வி நிறுவனங்களாக ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார். எனவே, 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரி அவர்களுக்குப் பொருந்தும் என விளக்கமளித்தார். 18 விழுக்காடு ஜி.எஸ்.டி. வரியால் போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களின் கட்டணம் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன், கல்வி நிறுவனங்களை போன்று இதற்கும் விலக்கு அளிக்க வலியுறுத்தியுள்ளனர்.