பீகார்| போதையில் மாப்பிள்ளை.. திருமணத்தை நிறுத்தி மணமகனின் குடும்பத்தை சிறைபிடித்த மணப்பெண்!

பீகாரில் மணமகன் ஒருவர் திருமண ஊர்வலத்திற்குத் தாமதமாக வந்ததால், அவரது பெற்றோரை, பெண் வீட்டார் பிணைக் கைதிகளாகப் பிடித்துவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார்
பீகார்ட்விட்டர்

பீகாரின் கதிஹார் மாவட்டம் குர்சேலா கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள சுல்தங்கஞ்ச் பகுதியை சேர்ந்த மஞ்சித் சவுத்ரி என்பவருக்கும், மனிஷா குமாரிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவர்களுடைய திருமணம் குர்சேலாவில் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

model image
model imagefreepik

சம்பவத்தன்று மணமகனின் திருமண ஊர்வலத்திற்காக பெண் வீட்டார் தரப்பில் அனைவரும் இரவு வரை காத்திருந்துள்ளனர். ஆனால் மணமகன் உள்ளிட்ட யாரும் திருமண மண்டபத்திற்கு வரவில்லை. இதனால் கோபமடைந்துள்ளார். பின்னர் மஞ்சித் சாலையில் காருக்குள் மயங்கிய நிலையில் போதையில் இருந்தது மனிஷாவுக்கு தெரியவந்தது.

இதையும் படிக்க: பதஞ்சலியின் 14 பொருட்களுக்குத் தடை... உத்தரகாண்ட் அரசு அதிரடி! மீண்டும் உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்!

பீகார்
ஆந்திரா| மகளைக் கடத்த மணமகன் வீட்டார் மீது மிளகாய்ப் பொடி வீச்சு.. சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. #Video

மஞ்சித்தின் இந்த நிலையைமைப் பார்த்த மனிஷா, அவரைத் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார். திருமணத்தின்போதே போதையில் இருந்ததாகச் சொல்லி திருமணத்தை நிறுத்திய மனிஷா, திருமணச் செலவுக்கு தாங்கள் செலவழித்த ரூ.4 லட்சத்தை மணமகன் குடும்பத்தினர் தரவேண்டும் எனக் கோரியுள்ளார். அந்தப் பணத்தைத் தரும் வகையில் மணமகனின் பெற்றோரைப் பிணைக் கைதியாக தாம் வைத்திருக்கப்போவதாகவும் மனிஷா அறிவித்துள்ளார். இதனால் பதறிப்போன மணமகனின் குடும்பத்தினர் அந்தப் பணத்தைக் கொடுத்து அவர்களை மீட்டுள்ளனர்.

model image
model imagefreepik

இதுகுறித்து போலீஸில் எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனினும் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மஞ்சித், ”திருமண ஊர்வலத்திற்கு முன்பு நண்பர்களைச் சந்தித்தேன். அப்போது என் காருக்குள் ஏறிய அவர்கள், ஏதோ என்னிடம் வலுக்கட்டாயமாகக் குடிக்கக் கொடுத்தார்கள். அது, என்னவென்று எனக்குத் தெரியவில்லை. அதற்குப்பிறகு, நான் அதிக போதையில் இருந்தேன். இதனால் மனிஷா என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: பாலியல் புகார்|கர்நாடக எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா கட்சியிலிருந்து இடைநீக்கம்!

பீகார்
நேரத்திற்கு வராத மணமகன்; ரூ35,000 பெற மணப்பெண் எடுத்த முடிவு! உ.பி திருமண திட்டத்தில் மீண்டும் மோசடி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com