ஆந்திரா| மகளைக் கடத்த மணமகன் வீட்டார் மீது மிளகாய்ப் பொடி வீச்சு.. சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. #Video

ஆந்திராவில் மகளைக் கடத்த மணமகன் வீட்டார் மீது மிளகாய்ப் பொடி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
viral video
viral videotwitter

ஆந்திர மாநிலம் கங்கவரத்தைச் சேர்ந்த சினேகாவும், அதே மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடானந்துவும் நரசராவ்பேட்டையில் உள்ள கல்லூரியில் ஒன்றாகப் படிக்கும்போது காதலர்களாகி உள்ளனர்.இதைத்தொடர்ந்து கடந்து ஏப்ரல் 13ஆம் தேதி, விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற துர்கா கோயிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகு சினேகா, தன்னுடைய கணவர் வெங்கடானந்துவின் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இந்த விஷயம் இருவீட்டாருக்கும் தெரியவர, குடும்பத்தினர் கலந்துபேசி திருமண வரவேற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக ஏப்ரல் 21 (நேற்று) நாள் குறிக்கப்பட்டது. இந்த விழா, ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கடியம் என்ற இடத்தில் நடைபெற்றது.

இந்த விழாவுக்கு சினேகாவின் பெற்றோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த சினேகாவின் குடும்பத்தினர்களும், உறவினர்களும் மணமகள் அலங்காரத்தில் இருந்த சினேகாவை வலுக்கட்டாயமாகக் கடத்திச் செல்ல முயல்கின்றனர்.

சினேகாவைத் தடுக்கும் மணமகன் வீட்டார் மீது அவர்கள் மிளகாய்ப் பொடியை அள்ளி வீசுகின்றனர். எனினும், அதையும் பொருட்படுத்தாமல் பெண்ணின் வீட்டாரிடமிருந்து சினேகாவை மாப்பிள்ளை வீட்டார் பத்திரமாக மீட்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த மோதலில் மணமகனின் உறவினர்களில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து பேசிய சினேகா, “என்னுடைய அம்மா, என் சகோதரர் மற்றும் உறவினர்கள் வந்து என்னை கடத்த முயன்றார்கள். இதற்காக அவர்கள்மீது மிளகாய்ப் பொடியை வீசினர். எதற்காக, திடீரென எதிர்ப்பு தெரிவித்தனர் என தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: சூரத்| 8 பேர் வாபஸ்.. காங்கிரஸ் மனு நிராகரிப்பு.. போட்டியின்றி வெற்றிபெற்ற முதல் பாஜக வேட்பாளர்!

viral video
ஆந்திரா : மயங்கி விழுந்து உயிரை விட்ட பெண் ; நான்கு பேருக்கு உயிர் கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com