பாலியல் புகார்|கர்நாடக எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா கட்சியிலிருந்து இடைநீக்கம்!

பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
பிரஜ்வால் ரேவண்ணா
பிரஜ்வால் ரேவண்ணாட்விட்டர்

கர்நாடக மாநிலம் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், அம்மாநில முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமியின் சகோதரரான எச்.டி.ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வால் ரேவண்ணா, ஹாசன் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் மீண்டும் களமிறக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், பல பெண்களுடன் அவர் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள், புகைப்படங்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மேலும் தங்களை அவர் தவறாக பயன்படுத்திக் கொண்டதாகவும், நெருக்கமாக இருக்கும்போது வீடியோ எடுத்து, மிரட்டுவதாகவும் சில பெண்கள் தெரிவித்திருந்ததும் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி முதல்வர் சித்தராமையாவுக்கு கர்நாடக மாநில மகளிர் ஆணையம் கடிதம் ஒன்றை எழுதியிருந்தது. இதன் தொடர்ச்சியாக, பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கில் சித்தராமையா தலைமையிலான அரசு சிறப்புப் புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. இந்த விவகாரத்தில், அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் என எச்.டி.குமாரசாமி தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அடங்கிய கூட்டம் இன்று கூடியது. இதில், பிரஜ்வால் ரேவண்ணாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் முடிவெடுக்கப்பட்டு உள்ளது. பிரஜ்வால் தற்போது நாட்டைவிட்டு வெளியேறி ஜெர்மனிக்கு சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: வேட்பு மனு வாபஸ்.. பாஜகவில் ஐக்கியம்.. ஷாக் கொடுத்த காங். வேட்பாளர்.. இந்தூரிலும் பாஜக வெற்றி?

பிரஜ்வால் ரேவண்ணா
“பிரஜ்வால் ரேவண்ணா மீதான பாலியல் புகார், பாஜகவிற்கு ஏற்கெனவே தெரியும்” - எதிர்க்கட்சிகள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com