“தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை” - உச்சநீதிமன்றம்

“தன்பாலின இணையர்களால் குழந்தைகளை சரியான முறையில் வளர்க்க முடியாது என்பதற்கான ஆதாரப்பூர்வ தரவுகள் இல்லை” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
தன்பாலினத்தவர்கள்
தன்பாலினத்தவர்கள்freepik

பல்வேறு நாடுகளில் தன்பாலின திருமணம் என்பது அங்கீகரிக்கப்பட்ட ஒரு விஷயமாகவே இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தற்போதுவரை அங்கீகாரம் இல்லாமல் இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கோரி பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுக்கள் மீது கடந்த ஏப்ரல் 18ம் தேதியில் இருந்து தொடர்ந்து 10 நாட்கள் விசாரணை நடைபெற்றது. இதுதொடர்பாக தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. அதன் முடிவாக இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ‘சட்ட அங்கீகாரம் இல்லை’ என தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

தன்பாலினத்தவர்கள்
தன் பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு !
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அப்போது இவ்வழக்கில் 4 விதமான தீர்ப்புகள் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதில் தலைமை நீதிபதி சந்திரசூட் சொன்ன கருத்தில்,

“நீதிமன்றத்தால் ஒரு சட்டத்தை உருவாக்க முடியாது. ஆனால் சட்டத்தின் சரத்துகளை கையாள முடியும். 200 ஆண்டுகளுக்கு முன்பு முன்னோர்களால் ஏற்கப்படாத விஷயங்கள் இப்போது ஏற்கப்படுகின்றன. இச்சிறப்பு திருமண சட்டத்தை அரசியல் சாசனத்திற்கு எதிரானதாக கருதினால் ஒரு முற்போக்கான சட்டத்தை இழக்க நேரிடும். தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கிடையாது. இருப்பினும் இதுதொடர்பாக என்ன செய்ய வேண்டும் என்பதை நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்.

தலைமை நீதிபதி சந்திரசூட்
தலைமை நீதிபதி சந்திரசூட்

மேலும் திருமணம் என்பது நிலையானது, மாறாதது என்று சொல்வது தவறான விஷயம். Sati (உடன்கட்டை ஏறுதல்), குழந்தை திருமணம் போன்ற முன்பு ஏற்கப்பட்ட விஷயங்கள் இன்று மறுக்கப்படுகின்றன. சட்டத்தை மறுஆய்வு செய்யும் அதிகாரம் நீதித்துறைக்கு இருக்கிறது. அதேசமயம் திருமணம் தொடர்பான விவகாரத்தில் புதிய சட்டத்தை உருவாக்க நாடாளுமன்றங்களையோ சட்டமன்றங்களையோ கட்டுப்படுத்த முடியாது.

தன்பாலினத்தவர்கள்
‘தன்பாலின திருமணங்களை அங்கீகரிப்பது தொடர்பாக ஆராய குழு’ - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

குழந்தை தத்தெடுப்பு:

திருமணம் செய்து கொள்ளாத ஜோடிகள் மற்றும் தன்பாலின ஜோடிகள் இணைந்து குழந்தையை தத்தெடுக்க முடியும். அவர்களுக்கான இந்த உரிமையை மறுக்க முடியாது. தன்பாலின ஜோடிகள் தத்தெடுப்பு விவகாரத்தில் பாகுபாடு காட்டப்படவில்லை என்பதை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

குழந்தை தத்தெடுப்பு
குழந்தை தத்தெடுப்பு

இந்த ஜோடிகளுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை அணுகுவதில் எந்த விதமான பாகுபாடும் காட்டப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இந்த தன்பாலின ஜோடிகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இவர்களுக்கான சிறப்பு தொலைதொடர்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

மேலும் இந்த ஜோடிகள் பாதுகாப்பான முறையில் வாழ்வதற்கு ஏற்ப வசதிகளையும் செய்து தர வேண்டும். இத்தகைய குழந்தைகள் கட்டாய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். எந்த ஒரு நபரும் ஹார்மோன் சிகிச்சைகளுக்கு கட்டாயம் உட்படுத்தப்பட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

துன்புறுத்தக் கூடாது:

பாலின அடையாளத்தை பற்றி விசாரிப்பதற்காக மட்டும் யாரொருவரையும் காவல் நிலையத்திற்கு வரவழைப்பதுகூடாது. குறிப்பாக இந்த குறிப்பிட்ட சமூக மக்களை துன்புறுத்தக் கூடாது. காவல்துறையினர் எக்காரணத்தை கொண்டும் இத்தகைய தன்பாலின நபர்களை அவர்களது பிறந்த குடும்பத்திற்கு திரும்புமாறு கட்டாயப்படுத்தக் கூடாது.

மற்ற குடிமக்களைப் போலவே இந்த தன்பாலின ஜோடிகளுக்கும் சமூகத்தில் மற்றவர்களைப் போல சமமாக வாழ அரசியல் சாசனம் வழங்கியிருக்கக்கூடிய அடிப்படை உரிமை என்பது உள்ளது. அதன் பொருள் அவர்கள் யாருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க அவர்களுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது என்பது.

ஆதாரப்பூர்வ தரவுகள் இல்லை

குழந்தை தத்தெடுப்பு ஒழுங்குமுறை தொடர்பான மத்திய அரசின் சுற்றறிக்கையில் தன்பாலினத்தவரை தவிர்த்தது அரசியலமைப்புக்கு எதிரானது. தன்பாலின இணையர்களால் குழந்தைகளை சரியான முறையில் வளர்க்க முடியாது என்பதற்கான ஆதாரப்பூர்வ தரவுகள் இல்லை” என்றார்.

தீர்ப்பு:

இப்படியாக தன்பாலினத்தவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கப்பட்டபோதும்கூட 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள், சட்ட அங்கீகாரம் இல்லை என்று கூறியதால், அதுவே தீர்ப்பாக ஏற்கப்பட்டுள்ளது.

இதனால் “தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை; நாடாளுமன்றம்தான் முடிவுசெய்ய வேண்டும். தன்பாலின திருமணங்களை அங்கீகரிப்பது தொடர்பாக உயர் அதிகாரம் கொண்ட குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும்” என்பது ஒட்டுமொத்த தீர்ப்பாக இருக்கிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com