FACT CHECK| ’நான் ஒரு பெண் அல்ல’ என பரவும் வீடியோ.. ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மாலதி லதா பேசியது என்ன?

”நான் ஒரு பெண் அல்ல” என ஹைதராபாத் பாஜக வேட்பாளரே சொல்லும் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதாவது, அவரைத் தவறாகச் சித்தரித்து வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.
மாதவி லதா
மாதவி லதாட்விட்டர்

17 மக்களவைத் தொகுதிகள் உள்ள தெலங்கானாவில், அடுத்த மாதம் 13ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதன் தலைநகராக அறியப்படும் ஹைதராபாத்தில், பரதநாட்டிய நடனக் கலைஞரான மாதவி லதா, பாஜகவின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெற்ற ராமநவமி நிகழ்ச்சியில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் கலந்துகொண்டபோது, அங்கிருந்த மசூதியை நோக்கி வில் அம்புகளை ஏவுவதுபோல் செய்கை காட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அவர் மன்னிப்பு தெரிவித்தபோதும், மாதவி லதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ”நான் ஒரு பெண் அல்ல” என அவரே சொல்லும் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதாவது, அவரை தவறாக சித்தரித்து வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்று உண்மையைக் கண்டறிந்துள்ளது.

இதையும் படிக்க: சீனியர்கள் இல்லாமலே வீறுநடை போடும் கத்துக்குட்டி நியூசி., அணி! சொந்த மண்ணில் பாக். மீண்டும் தோல்வி!

மாதவி லதா
மசூதியை நோக்கி அம்புவிடும் சைகை சர்ச்சை.. ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இந்தி ஊடகம் ஒன்று அவரிடம் நேர்காணல் கண்டுள்ளது. அவர், பாஜகவில் இணைந்தது மற்றும் பிரதமர் நரேந்திர மோடி குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். அப்போது அவரிடம், ’ஹைதராபாத்தில் உள்ள பழைய நகரப் பகுதியில் உள்ள சில பகுதிகளுக்கு, குறிப்பாக, தலாப் கட்டா போன்ற பகுதிகளுக்கு பாஜக தலைவர்கள் யாரும் சென்றதில்லையே? ஒரு பெண்ணாக, அந்தச் சூழ்நிலையை நீங்கள் எவ்வாறு சமாளிக்கத் திட்டமிட்டுள்ளீர்கள்?’ என அந்த செய்தி சேனலின் நிருபர் கேள்வி எழுப்புகிறார். அதற்கு மாதவி லதா இந்தியில் பதிலளிக்கிறார். அவர், “நான் ஒரு பெண் அல்ல, நான் சக்தி. அதை நீங்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். என்னை ஒரு மகிளா (பெண்) என்று திரும்பத் திரும்ப அழைக்காதீர்கள். நீங்கள் என்னைப் பலவீனமாகக் கருதுவதுபோல் தெரிகிறது” என்கிறார்.

தொடர்ந்து அவர், "நான் தனி மனுஷி அல்ல. இங்கே இருக்கும் சகோதர சகோதரிகளின் பலத்துடன் (சக்தி) இருக்கிறேன்” என்கிறார். பொதுவாக, சக்தி என்பது வலிமையைக் குறிக்கும் சொல்லாகும். அதைத்தான் அவர், சக்தி நிறைந்த பெண்களுடன் இருப்பதாக உணர்த்துகிறார். ஆனால், அவர் பேசும் முழு வீடியோ தற்போது கட் செய்யப்பட்டு, ‘நான் ஒரு பெண் அல்ல’ என்ற வாக்கியத்தை மட்டுமே சொல்வதாக, தவறாகப் பொருள்கொள்ளும்படி இணையத்தில் பரப்பப்படுகிறது.

இதையும் படிக்க: IPL ஒளிபரப்பு விவகாரம் | நடிகை தமன்னாவுக்கு மும்பை போலீஸ் சம்மன்..

மாதவி லதா
மசூதியை நோக்கி அம்பு விடுவதுபோல் செய்கை.. சர்ச்சையில் சிக்கிய பாஜக வேட்பாளர்.. யார் இந்த மாதவி லதா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com