மதுபானக் கொள்கை முறைகேடு: மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 18ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 6) உத்தரவிட்டுள்ளது.
மணீஷ் சிசோடியா
மணீஷ் சிசோடியாட்விட்டர்

டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அடுத்தடுத்து ஆம் ஆத்மியைக் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையின் 2ஆம் எண் அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மணீஷ் சிசோடியா
மணீஷ் சிசோடியா

முன்னதாக இவ்வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா, எம்.பி. சஞ்சய் சிங், சத்யேந்தர் ஜெயின் மற்றும் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திர சேகர ராவின் மகள் கவிதா ஆகியோர் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில், மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 18ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 6) உத்தரவிட்டுள்ளது. முன்னதாக அவருக்கு வழங்கப்பட்ட நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில், இன்று மணீஷ் சிசோடியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மணீஷ் சிசோடியா கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மணீஷ் சிசோடியா
மணீஷ் சிசோடியா

இதற்கிடையே நேற்று, அவர் திகார் சிறையிலிருந்து தனது சட்டமன்றத் தொகுதியான பட்பர்கஞ்ச் மக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், “மக்களை விரைவில் வெளியில் சந்திப்பேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: ”மாண்டியாவின் வளர்ச்சியே முக்கியம்” - பாஜகவில் இணைந்தார் சுயேட்சை எம்.பி சுமலதா! யார் இவர்?

மணீஷ் சிசோடியா
8 மணி நேர விசாரணைக்குப் பின் மணீஷ் சிசோடியாவை கைது செய்தது சிபிஐ.. பின்னணி என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com