கேள்வி கேட்க லஞ்சம்: நாளை விசாரணைக்கு ஆஜராக உத்தரவு.. மஹுவா மொய்த்ராவுக்கு சம்மன் அனுப்பிய ED!

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் மீறல் வழக்கில் மஹுவா மொய்த்ரா மற்றும் தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தானிக்கும் அமலாக்கத்துறை இன்று (மார்ச் 27) சம்மன் அனுப்பியுள்ளது.
மஹுவா மொய்த்ரா, அமலாக்கத் துறை
மஹுவா மொய்த்ரா, அமலாக்கத் துறைட்விட்டர்

3v 33நாடு முழுவதும் ஜனநாயகப் பெருவிழா, சந்தோஷத்துடன் களைகட்டத் தொடங்கியிருக்கிறது. அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

`
`

இதில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் எம்.பி. பதவி பறிக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மஹுவா மொய்த்ரா மீண்டும் கிருஷ்ணா நகர்த் தொகுதியில் களமிறக்கப்பட்டு உள்ளார். மொய்த்ராவை எதிர்த்து கிருஷ்ணாநகர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ராஜ்மாதா (ராணி அம்மா) என்று அழைக்கப்படும் அம்ரிதா ராயை பாஜக வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இதையடுத்து இருவருக்கும் இடையே தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இதையும் படிக்க: குஜராத்: கைகோர்த்த ஆம் ஆத்மி - காங்கிரஸ்.. பாஜகவை வீழ்த்த வியூகம்!

மஹுவா மொய்த்ரா, அமலாக்கத் துறை
மஹுவாவை சாய்க்க பாஜக கையிலெடுத்த பிரம்மாஸ்திரம்.. களமிறக்கப்பட்ட ராஜமாதா.. யார் இந்த அம்ரிதா ராய்?

இந்த நிலையில், அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் மீறல் வழக்கில் மஹுவா மொய்த்ரா மற்றும் தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தானிக்கும் அமலாக்கத்துறை இன்று (மார்ச் 27) சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில் மஹுவா மொய்தரா மற்றும் தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தானி நாளை (மார்ச் 28) அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ராபுதிய தலைமுறை

கிருஷ்ணா நகர்த் தொகுதி 2009ஆம் ஆண்டிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் கோட்டையாக இருந்து வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் இத்தொகுதியில் நிறுத்தப்பட்ட மஹுவா மொய்த்ரா, முன்னாள் கால்பந்து வீரரான பாஜகவின் கல்யாண் சவுபேயை 65,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நேரத்தில் மஹுவாவுக்கு எதிராக அமலாக்கத் துறை இந்த வழக்கைக் கையில் எடுத்திருப்பதால், அது பாஜகவுக்கு சாதகமாக அமையும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: அறிவித்த 1 மணி நேரத்தில் உத்தவ் அணி வேட்பாளருக்கு 3 வருட பழைய ஊழல் வழக்கில் நோட்டீஸ்; ஆக்‌ஷனில் ED!

மஹுவா மொய்த்ரா, அமலாக்கத் துறை
மஹுவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ சோதனை.. லோக்பால் ஆணைய உத்தரவால் நடவடிக்கை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com