மஹுவாவை சாய்க்க பாஜக கையிலெடுத்த பிரம்மாஸ்திரம்.. களமிறக்கப்பட்ட ராஜமாதா.. யார் இந்த அம்ரிதா ராய்?

மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணா நகர்த் தொகுதியில் மஹுவா மொய்த்ராவை எதிர்த்து பாஜக சார்பில் அரச குடும்பத்தைச் சேர்ந்த அம்ரிதா ராய் களமிறக்கப்பட்டு உள்ளார்.
அம்ரிதா ராய், மஹுவா மொய்த்ரா
அம்ரிதா ராய், மஹுவா மொய்த்ராட்விட்டர்

மஹுவா மொய்த்ரா தொகுதியைக் குறிவைத்த பாஜக

சரித்திரம் பேசும் ஜனநாயகப் பெருவிழா, நாடு முழுவதும் சந்தோஷத்துடன் களைகட்டத் தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. எனினும் இதர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தேர்தல் வேலைகள் சூடுபிடித்து உள்ளன. அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் எம்.பி. பதவி பறிக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மஹுவா மொய்த்ரா மீண்டும் கிருஷ்ணா நகர்த் தொகுதியில் களமிறக்கப்பட்டு உள்ளார்.

கிருஷ்ணா நகர்த் தொகுதி 2009ஆம் ஆண்டிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் கோட்டையாக இருந்து வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் இத்தொகுதியில் நிறுத்தப்பட்ட மஹுவா மொய்த்ரா, முன்னாள் கால்பந்து வீரரான பாஜகவின் கல்யாண் சவுபேயை 65,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் மொய்த்ரா, சமீபத்தில் அத்தொகுதியில் தன்னை எதிர்த்து பாஜக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படாததைச் சுட்டிக்காட்டியிருந்தார். இதுகுறித்து அவர் தன்னுடைய வலைதள பக்கத்தில், “இன்னும் வேட்பாளரை கண்டுபிடிக்க முடியவில்லையாம்” எனப் பதிவிட்டிருந்தார்.

இதையும் படிக்க: மக்களவை தேர்தல்| அறிவிப்பு..வாபஸ்..ரிப்பீட்டு! அடுத்தடுத்து விலகும் வேட்பாளர்கள்; கலக்கத்தில் பாஜக?

அம்ரிதா ராய், மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ சோதனை.. லோக்பால் ஆணைய உத்தரவால் நடவடிக்கை!

களமிறக்கப்பட்ட கிருஷ்ணா நகர் ராஜ மாதா!

இந்த நிலையில்தான், மொய்த்ராவை எதிர்த்து கிருஷ்ணாநகர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ராஜ்மாதா (ராணி அம்மா) என்று அழைக்கப்படும் அம்ரிதா ராயை பாஜக வேட்பாளராக நிறுத்தியுள்ளது. முன்னதாக மொய்த்ராவை எதிர்த்து நிற்கக்கூடிய வேட்பாளர்கள் பட்டியலை பாஜக தயார் செய்ததில், ஜூலன் கோஸ்வாமி, சோமா பிஸ்வாஸ் உள்ளிட்ட தேசிய விளையாட்டு வீரர்களும் அடக்கம். இன்னும் சொல்லப்போனால் அந்தத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட நடிகர் ஒருவரும் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், என்ன நினைத்ததோ தெரியவில்லை. பாஜக இறுதிக்கட்டத்தில் அம்ரிதா ராயைக் களமிறக்கியது. இதில் இன்னொரு ட்விஸ்ட் என்னவென்றால், கடந்த மார்ச் 20ஆம் தேதிதான் அவர் பாஜகவில் இணைந்துள்ளார்.

அவர் இணைந்து அடுத்த 4 நாட்களில் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். முன்னதாக, அவரை நிறுத்தினால்தான் வாக்குச் சதவிகிதத்தைப் பெற முடியும் என மாநில தலைமை எடுத்துரைத்தாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அவரைக் களமிறக்க பாஜக தொடர்ந்து கடுமையான முயற்சிகளை மேற்கொண்டதாக அம்மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பு, மொய்த்ராவுக்கு எதிராக மகாராஜா கிருஷ்ணசந்திராவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை பாஜக நிறுத்தக்கூடும் எனத் தகவல்கள் பறந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பாஜகவின் பக்கா ஸ்கெட்ச்.. சந்தேஷ்காலியில் போராட்டத்தில் ஈடுபட்ட ’ரேகா பத்ரா’-க்கு சீட்.. யார் இவர்?

அம்ரிதா ராய், மஹுவா மொய்த்ரா
கெடு விதித்த மத்திய வீட்டுவசதி துறை: அரசு இல்லத்தைக் காலிசெய்த மஹுவா மொய்த்ரா!

’சாதாரண மக்களின் குரலாக வந்துள்ளேன்’ - அம்ரிதா ராய்

இதுகுறித்து அம்ரிதா ராய் அளித்த பேட்டி ஒன்றில், “நாடியாவின் வரலாற்றில் மன்னர் கிருஷ்ண சந்திராவின் சாதனைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். இந்தியாவைச் சேர்ப்பதில் கிருஷ்ணாநகர் அரச குடும்பத்தின் பங்கு இன்னும் அனைவரும் நினைவிலும் உள்ளது. நான் அரச மருமகளாக அல்ல தேர்தல் களத்திற்கு வரவில்லை. ஒரு சாதாரண மக்களின் குரலாக இருக்கவே வந்துள்ளேன். மக்கள் என்னை இரு கைகளையும் உயர்த்தி ஆசீர்வதிப்பார்கள் என்று நம்புகிறேன். மஹுவா மொய்த்ரா இத்துடன் மூட்டை கட்டிவிடுவார்” எனத் தெரிவித்துள்ளார்.

மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ரா ட்விட்டர்

அதேநேரத்தில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் குணால் கோஷ், வங்காள நவாப் சிராஜ்-உத்-தௌலா ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகப் போராடியபோது, ​​கிருஷ்ணாநகரின் அரசர் ராஜா கிருஷ்ண சந்திர ராய், ஆங்கிலேயப் படைகளுக்கு உதவியதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இதையும் படிக்க: குஜராத்: காங்கிரஸைத் தொடர்ந்து அடுத்தடுத்து விலகும் பாஜக வேட்பாளர்கள்.. காரணம் என்ன?

அம்ரிதா ராய், மஹுவா மொய்த்ரா
எம்.பி. பதவி நீக்கம்: அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கிய மஹுவா மொய்த்ரா

யார் இந்த அம்ரிதா ராய்?

அம்ரிதா ராய் கிருஷ்ணா நகரின் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 'ராஜ்பாரியின் ராஜ மாதா' என்ற பட்டத்தைப் பெற்றவர். அதாவது, கிருஷ்ணா நகர்த் தொகுதியில் உள்ள அரச அரண்மனையின் மகா ராணி. அவரின் குடும்ப மரபு கிருஷ்ணா நகரின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது. அங்கு அவரது முன்னோர்கள் ராஜ்யத்தின் விதியை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தனர். வங்காளத்தில் பிறந்து வளர்ந்த அம்ரிதா ராய் தனது ஆரம்பக் கல்வியை லா மார்டினியர் பள்ளியில் முடித்தார்.

பின்னர் அவர் லொரேட்டோ கல்லூரியில் உயர்கல்வியைத் தொடர்ந்தார். தொழில்ரீதியாக, ராய் ஒரு ஃபேஷன் ஆலோசகராக இருந்துள்ளார். தொழில்துறையில் தனக்கென ஓர் இடத்தை தம்முடைய படைப்பாற்றல் மூலம் உருவாக்கினார். வரலாற்றுக்கும் பாரம்பரியத்துக்கும் பெருமை சேர்க்கும் அவரது குடும்பத்தில், அவர் அரசியலுக்கு வந்தது ஓர் ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது. மஹுவாவுக்கு எதிரான குற்றச்சாட்டும், மாநிலத்தில் நிலவும் பிரச்னைகளும் பாஜகவுக்கு சாதகமாக அமையும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ரோகித் Vs ஹர்திக்! அசிங்கப்படுவது யார்? சென்னை அணியை பார்த்தும் திருந்தாத மும்பைஅணி! யார் மீது தவறு?

அம்ரிதா ராய், மஹுவா மொய்த்ரா
பதவிநீக்கம்: “போரில் மஹுவா வெற்றிபெறுவார்” - ஆதரவுக்கரம் நீட்டிய மம்தா பானர்ஜி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com