ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியைச் சந்தித்த தமிழ்நாடு குழு
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியைச் சந்தித்த தமிழ்நாடு குழுpt web

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் | இந்தியா முழுவதும் ஆதரவை திரட்டும் பணிகளில் திமுக தீவிரம்!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக, வரும் 22 ஆம்தேதி சென்னையில் நடக்க உள்ள கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்க வருமாறு, கர்நாடக முதலமைச்சருக்கு தமிழக அரசு சார்பில் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Published on

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை, மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு குறைவு உள்ளிட்ட விவகாரங்களை தேசிய அளவில் எடுத்து செல்வதற்கு, தென் மாநில முதல்வர்கள் மற்றும் கட்சித் தலைவர்களை இணைத்து, கூட்டு நடவடிக்கை குழு அமைத்து, அடுத்தகட்ட நடவடிக்கையை தொடர, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக 7 மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதன் தொடர்ச்சியாக, பிற மாநில முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித்தலைவர்களை நேரில் சந்தித்து, கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்திற்கு அழைக்க, அமைச்சர்கள், எம்.பி.,க்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அமைச்சர் பொன்முடி, எம்.பி. அப்துல்லா ஆகியோர், கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரை சந்தித்து சென்னையில் தமிழக அரசு சார்பில் நடக்க உள்ள கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின் வழங்கிய அழைப்பு கடிதத்தை வழங்கினர்.

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியைச் சந்தித்த தமிழ்நாடு குழு
ம.பி.| இந்திய அணி வெற்றியில் ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பி வன்முறை; கைதானவர்கள் மொட்டையடித்து ஊர்வலம்!

முன்னதாக மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டுக்குழுவின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு, தமிழக குழு விடுத்த அழைப்பை ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் ஏற்றுக்கொண்டது. திமுக எம்.பி. தயாநிதி மாறன், அமைச்சர் டி. ஆர்.பி. ராஜா ஆகியோர் ஒடிசா சென்று, அம்மாநில முன்னாள் முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக்கை நேரில் சந்தித்து, முதல்வர் ஸ்டாலினின் கடிதங்களை வழங்கி அழைப்பு விடுத்தனர். இந்த அழைப்பை பிஜூ ஜனதா தளம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி தமிழக குழுவை சந்திக்க நேரம் தரவில்லை.

இதேபோல, ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத்தலைவர் பல்லா சீனிவாச ராவை சந்தித்து தமிழக பிரதிநிதிகள் குழுவினர் அழைப்புக்கடிதம் அளித்தனர். ஆனால் தெலுங்குதேசம் கட்சியின் தேசிய தலைவரும், ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு, தமிழக குழுவை சந்திக்க நேரம் தரவில்லை. ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியைச் சந்தித்து அமைச்சர் எ.வ.வேலு, திமுக எம்பி வில்சன் ஆகியோர் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

இதேபோல, திரிணாமூல் காங்கிரஸ் மக்களவை குழுத்தலைவர் டெரிக் ஓ பிரையன் மற்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிகாஷ் ரஞ்சன் ஆகியோரை திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என். சோமு சந்தித்து தமிழக முதலமைச்சரின் கடிதத்தை அளித்தார். மேலும், கேரளா, தெலங்கானா, பஞ்சாப் மாநிலங்களுக்கு தமிழக குழு நாளை (( மார்ச் 13 )) செல்கிறது.

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியைச் சந்தித்த தமிழ்நாடு குழு
ரஷ்யா - உக்ரைன் இடையே 30 நாள் போர் நிறுத்தம்? மல்லுக்கட்டும் அமெரிக்கா.. செவி சாய்ப்பாரா புதின்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com