தியேட்டரில் மொத்த டிக்கெட்களையும் வாங்கிய மலேசிய பெண்.. ரீல்ஸ் பதிவில் திட்டித்தீர்த்த நெட்டிசன்கள்!

மலேசியாவில் பணக்கார் பெண் ஒருவர், தியேட்டர் ஒன்றில் அனைத்து டிக்கெட்களையும் வாங்கி, வீடியோ வெளியிட்ட பதிவு இணைத்தில் வைரலானது.
எரிக்கா பைதுரி
எரிக்கா பைதுரிtwitter

மலேசியாவைச் சேர்ந்த மிகவும் பணக்கார பெண், எரிக்கா பைதுரி. இவர் சமீபத்தில் டிக்-டாக் (இந்தியாவில் தடை) தளத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அதில், தியேட்டரில் அனைத்து இருக்கைகளையும் அவர் முன்பதிவு செய்து தனி ஆளாக படம் பார்ப்பது போன்று காட்சி இருந்தது. அந்த மினி தியேட்டரில் 10 வரிசை இருக்கைகள் இருப்பது வீடியோவில் தெரிகிறது. ஒவ்வொரு வரிசையிலும் 16 இருக்கைகள் இருந்தன. அந்த இருக்கைகள் அனைத்தும் காலியாக இருந்தன. மேலும் அவர் தியேட்டரில் பாப்கார்ன் சாப்பிட்டு கொண்டு கண்ணாடி அணிந்திருந்த காட்சிகளும் அதில் இருந்தன.

வீடியோவுடன் அவர் வெளியிட்ட பதிவில், 'நாங்கள் உள்முக சிந்தனை கொண்டவர்கள். எனவே நாங்கள் அனைத்து இருக்கைகளையும் வாங்கினோம்' எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ வலைதளங்களில் வைரலாகியது. மேலும் இந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். குறிப்பாக, அவர் தனது வசதியை காட்டிக்கொள்வதாக பலரும் விமர்சனம் செய்திருந்தனர். பணக்கார திமிரைக் காட்டுவதாக பலரும் பதிவிட்டிருந்தனர்.

பின்னர் இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த எரிக்கா பைதுரி, “இந்த வீடியோ, ஒரு கேலிக்காக எடுக்கப்பட்டது. ஆனால், அது எதிர்பாராதவிதமாக வைரலானது. இதுகுறித்து நெட்டிசன்கள் பலவாறு பதிவுகள் இட்டிருந்தனர். அது அனைத்தும் வேடிக்கையாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. அதனால்தான் அந்த வீடியோவை அப்படியே இணையதளத்தில் விட்டுவிட்டேன். என்னை எப்படித் திட்டினாலும் அவர்களை மன்னிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஐலைனர் மூலம் 6 வரிகளில் கடிதம்.. டிரைவர் சொன்ன சீக்ரெட்.. சிஇஓ மகனின் கொலையில் வெளியான புதுதகவல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com