டெல்லியில் தலை விரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு; ஆம் ஆத்மியை கை காட்டும் பாஜக!

டெல்லியில் நிலவும் கடும் வெப்பநிலையால் குடிநீர் தட்டுப்பாடு விஸ்வரூபம் எடுத்துள்ளது. குடிநீருக்காக 4,000 முதல் 6,000 ரூபாய் வரை செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
தண்ணீர் தட்டுப்பாடு
தண்ணீர் தட்டுப்பாடுபுதிய தலைமுறை

டெல்லியில் குடிநீருக்காக மக்கள் அல்லாடி வரும் நிலையில், அதை ஆளும் ஆம் ஆத்மியும், பாஜகவும் அரசியல் சண்டையாக மாற்றி உள்ளன. டெல்லி அரசுக்கு எதிராக பாஜக போராட்டத்தையும், பாஜக மீது ஆம் ஆத்மி முன்வைத்துள்ள குற்றச்சாட்டையும் பார்ப்போம்...

கிழக்கு டெல்லி முதல் தெற்கு டெல்லி வரை தண்ணீர் தட்டுப்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விவேகானந்தர் முகாம், கோவிந்த்புரி மற்றும் ஓக்லா உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஒரு குடம் தண்ணீருக்காக பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. டேங்கர் லாரி வந்தவுடன் ஒரு குடம் தண்ணீருக்காக ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளும் நிலை காணப்படுகிறது.

தண்ணீர் தட்டுப்பாடு
தண்ணீர் தட்டுப்பாடு.. டெல்லியில் குடிநீரை வீணாக்கினால் ரூ.2000 அபராதம்!

இந்நிலையில் , தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு முழுக்க முழுக்க ஆளும் ஆம் ஆத்மி அரசுதான் காரணம் என பாஜக குற்றஞ்சாட்டி வருகிறது. ஆம் ஆத்மி அரசை கண்டித்து டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் பாஜகவின் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக மாநில தலைவர் வீரேந்திர சச்தேவா தலைமையில் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக பதவியேற்றபோது டெல்லி நீர்வளத்துறை வாரியம் லாபத்தில் இயங்கியதாகவும் தற்போது கடனில் மூழ்கித் தவிப்பதாகவும் வீரேந்திர சச்தேவா குற்றஞ்சாட்டினார். இதனிடையே, சத்தர்பூர் பகுதியில் செயல்பட்டுவரும் டெல்லி நீர்வளத்துறை வாரிய அலுவலகத்தை அடையாளம் தெரியாத நபர்கள் சூறையாடினர். அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து கண்ணாடி கதவுகள் மற்றும் பொருட்களை அடித்து நொறுக்கினர்.

தண்ணீர் தட்டுப்பாடு
பெங்களூரு தண்ணீர் தட்டுப்பாடு | விதியை மீறிய 22 குடும்பங்களிடம் இருந்து ரூ.1.1 லட்சம் அபராதம்!

இதற்கிடையில் , டெல்லியில் தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் சூழ்நிலையில், குடிநீர் குழாய்களை உடைக்கும் சதி நடப்பதாக டெல்லி அமைச்சர் அதிஷி குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும் என டெல்லி காவல்துறை ஆணையர் மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோருக்கு அதிஷி கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com