தண்ணீர் தட்டுப்பாடு.. டெல்லியில் குடிநீரை வீணாக்கினால் ரூ.2000 அபராதம்!

டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில், குடிநீரை வீணாக்கினால் அபராதம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாகனங்களை கழுவுவது, தண்ணீரை தொட்டிகளில் அதிகளவில் சேமித்து வைத்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.
குடிநீர்  தட்டுப்பாடு
குடிநீர் தட்டுப்பாடுpt web

ஹரியானா மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு தரவேண்டிய நீரை குறைவாக தருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் தண்ணீரை வீணடிப்பதை தடுக்கும் நோக்கத்தில் சில உத்தரவுகள் பிறபிக்கப்பட்டுள்ளன. குடிநீரை வீணாக்கினால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதனை கண்காணிக்கும் வகையில் 200 குழுக்கள் அமைக்கப்படும் எனவும், இந்த குழுக்கள் நகரத்தில் இருக்கும் அனைத்து பகுதிகளுக்கும் செல்லும்.

குடிநீர் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் கொடுக்கப்படும் தண்ணீரை பயன்படுத்தி வாகனங்கள் கழுவுதல், தொட்டிகளில் நிரம்பவிட்டு தண்ணீரை வீணடித்தல் போன்ற விஷயங்கள் கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் குழாய்களுக்கு அனுப்பப்படும் குடிநீரை முறைக்கேடாக வணிகரீதியாக பயன்படுத்துதல், கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படுவதையும் இந்த குழு கண்காணிக்கும். அமைக்கப்பட இருக்கும் குழுக்கள் நாளை காலை 8 மணி முதல் செயல்படத் துவங்கும். தண்ணீர் சவாலை எதிர்கொள்ளும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி மாநில அரசு சார்பில் இந்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com