பெங்களூரு தண்ணீர் தட்டுப்பாடு | விதியை மீறிய 22 குடும்பங்களிடம் இருந்து ரூ.1.1 லட்சம் அபராதம்!

பெங்களூரில் வரலாறு காணாத அளவிற்கு கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், குடிநீரை வீணடித்த 22 குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய் அபாரதம் விதித்து அதிகாரிகள் அதிரடி காட்டியுள்ளனர்.
பெங்களூரு தண்ணீர் தட்டுப்பாடு
பெங்களூரு தண்ணீர் தட்டுப்பாடுமுகநூல்

பெங்களூரில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கான குடிநீர் தட்டுப்பாடு இந்த ஆண்டு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் விதித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்கூட ‘ஹோலி பண்டிகையின்போது காவிரி நீரை பயன்படுத்தி நீச்சல்குளங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டாம்’ என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு தண்ணீர் தட்டுப்பாடு
தண்ணீர் தட்டுப்பாடு | ‘ஹோலி கொண்டாட காவிரி நீர் கூடாது..’ - பெங்களூரு மக்களுக்கு அரசு வைத்த செக்!
பெங்களூரு தண்ணீர் தட்டுப்பாடு
பெங்களூரு தண்ணீர் தட்டுப்பாடு

கர்நாடக மாநிலத்தின் 236 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்திருந்த நிலையில், அதில் 219 தாலுகாக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இப்படி கடுமையாக நிலவி வரும் பஞ்சத்தின் காரணமாக குடியிருப்புகளில் குடிக்க, கைகழுவ, கழிப்பறை செல்வதற்குகூட தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

இதுபோன்ற காரணங்களால் தோட்டத்துக்கு நீர் பாய்ச்சுவது, கார் கழுவுவது, கட்டுமானப் பணிகள் போன்றவற்றுக்குக்கூட தண்ணீரை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி தண்ணீரை வீணாக பயன்படுத்தும் குடியிருப்பாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கவும் அரசு முடிவு செய்யப்பட்டிருந்தது.

பெங்களூரு தண்ணீர் தட்டுப்பாடு
பெங்களூர் தண்ணீர் தட்டுப்பாடு... மாறி மாறி குற்றம்சாட்டும் கட்சிகள்! உண்மை என்ன?

இந்நிலையில் ‘குடிநீரை தேவையின்றி செலவு செய்யக்கூடாது’ என்ற குடிநீர் வாரியத்தின் உத்தரவை மீறிய 22 குடும்பங்களுக்கு பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் தலா ரூ.5000 அபராதம் விதித்துள்ளது. இதன்மூலம் மொத்தமாக ரூ.1.1 லட்சம் அபராதத் தொகையை வசூலித்துள்ளது.

பெங்களூரு தண்ணீர் தட்டுப்பாடு
பெங்களூரு தண்ணீர் தட்டுப்பாடு

இதில் பெங்களூருவின் தென் பகுதியில் இருந்து அதிகபட்சமாக ரூ.80,000 வசூலிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கொண்டு மக்கள் தண்ணீரை வீணாக்கமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com