‘உயிர்போறவரை பக்கத்துல இருந்தேன்..’ கண்ணெதிரே நடந்ததை கண்ணீரோடு சொன்ன அஜித்தின் நண்பர்
காவலர்களால் கொல்லப்பட்ட அஜித்தின் மரணத்தில், கடைசி நிமிடங்களில் நடந்தவை குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்களை கூறி இருக்கிறார் அஜித்தின் நண்பர் மனோஜ் பாபு.. வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், அஜித்தின் பின்புலம் குறித்தும், நடந்தவை குறித்தும் அவர்களது நண்பர்கள் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், அஜித்குமாரின் நண்பர் மனோஜ் பாபு, பல முக்கிய விஷயங்களை உடைத்து பேசி இருக்கிறார். அஜித்குமார் அடித்து துன்புறுத்தப்பட்ட போது தான் அங்குதான் இருந்ததாகவும், அஜித்திடம் பக்கத்தில் உட்கார்ந்து பேச முற்படுகையில் அவர் மீது கஞ்சா வாடை வந்ததாகவும், கஞ்சாவை குடிக்க வைத்தே அஜித்தை அடித்ததாகவும் கூறியுள்ளார்.
வாடை வந்தபிறகு அஜித் போதையில் இருக்கிறாரா என்று போலீஸாரிடம் கேட்டபோது அவர்கள் மறுத்ததாகத் தெரிவித்திருக்கிறார். அஜித்குமார் தண்ணீர் கேட்ட நிலையில், முதலில் கொடுக்காத காவல்துறையினர், அவர் மீண்டும் மீண்டும் கேட்டபோது தண்ணீரில் மிளகாய் பொடி கலந்து கொடுத்ததை தன் கண்ணால் பார்த்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.
முகம் முழுவதும் மிளகாய் பொடியை தடவியதாகவும், நாடித்துடிப்பை பரிசோதித்தபோது நாடி அடங்கிவிட்டதாகவும், இதயத்துடிப்பும் நின்றுவிட்டதாகவும் அதிர்ச்சியோடு சொன்ன மனோஜ், அஜித் மரணித்த பிறகுதான் அவரை ஆட்டோவில் வைத்து எடுத்துச்சென்றதாக கூறியுள்ளார்.
மனோஜ்பாபு பேசிய முழுமையான காணொளி...