அஜித் குமார், உடற்கூராய்வு அறிக்கை
அஜித் குமார், உடற்கூராய்வு அறிக்கைpt web

சிகரெட் சூடு.. மூளையில் ரத்தக்கசிவு... அதிர்ச்சி அளிக்கும் அஜித் குமாரின் உடற்கூராய்வு அறிக்கை

இளைஞர் அஜித் உடலில் சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

செய்தியாளர் பிரசன்னா

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறையினரால் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட அஜித்குமார் தொடர்பான மருத்துவ பிரேத பரிசோதனை அறிக்கை புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாகக் கிடைத்திருக்கிறது.

அறிக்கையின் அடிப்படையில், அஜித்குமாரின் உடலில் சுமார் 50 இடங்களில் வெளிப்புற காயங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் 12 காயங்கள் சிராய்ப்புக் காயங்கள் என்றும், மீதமுள்ளவை அனைத்தும் ரத்தக் கட்டு (கன்றிய நிலையில் இருக்கும் காயங்கள்) எனவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் அந்த அறிக்கையில், இந்தக் காயங்கள் வெறும் வெளிப்புறக் காயங்கள் மட்டுமல்ல எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொன்றும் பல தாக்கங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றன எனத் தெரிவிக்கும் அறிக்கை ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கிறது. காயங்கள் பல்வேறு கோணங்களில் உள்ளதால், பலர் சேர்ந்து பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்தி தாக்கியிருக்க வாய்ப்பு உள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

அஜித் குமார், உடற்கூராய்வு அறிக்கை
நாசா உடன் கைக்கோர்த்த Netflix.. இனி விண்வெளி நிலையத்தை நேரலையில் பார்க்கலாம்!

வயிற்றின் நடுவே கம்பை வைத்து குத்தி காயப்படுத்தப்பட்டிருப்பதாகவும், தலையில் கம்பை வைத்து தாக்கியதில் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பதாகவும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சிகரெட் சூட்டால் சித்திரவதை செய்யப்பட்டது பற்றிய தகவலும் மருத்துவ அறிக்கையில் இடம்பெற்றிருக்கிறது.

திருப்புவனம் அஜித் குமார்
திருப்புவனம் அஜித் குமார்

மருத்துவ நிபுணர்களின் மதிப்பீட்டின்படி, இந்த அளவிலான காயங்கள், ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டிருக்கவே வாய்ப்பு அதிகம். அதாவது, ஒரே நேரத்தில் பலர் சேர்ந்து தொடர்ச்சியாக அடிக்கும்போது உருவாகும் காயங்கள். இது திட்டமிட்டு, தொடர்ந்து, பல மணி நேரங்கள் நடத்திய தீவிரமான காவல் சித்திரவதை என்றே புரிந்துகொள்ளப்படுகிறது.

மிக முக்கியமாக அஜித் குமாருக்கு உடல் முழுவதும் சூடு வைக்கப்பட்டிருப்பதற்கான தகவலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் இருக்கிறது அதிர்ச்சியை அளிக்கிறது.

அஜித் குமார், உடற்கூராய்வு அறிக்கை
காவல்துறை அத்துமீறலில் சாதி ஆதிக்க மனநிலையா? தரவுகள் சொல்லும் உண்மை இதுதான்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com