மே.வங்கம்: பந்து என நினைத்து நாட்டு வெடிகுண்டை எடுத்து விளையாடிய சிறுவர்கள்.. பறிபோன சிறுவன் உயிர்!

மேற்கு வங்கத்தில் வெடிகுண்டு வெடித்ததில் காயமடைந்த 3 சிறுவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்ற இருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வெடிகுண்டு
வெடிகுண்டுட்விட்டர்

மேற்கு வங்கம் ஹூக்ளி மாவட்டம், பாண்டுவாவில் உள்ள ஒரு குளத்தின் அருகே இன்று காலை சிறுவர்கள் சிலர் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அப்பகுதியில் வெடிகுண்டு வெடித்தது. இதில் 3 சிறுவர்கள் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் காயமடைந்த சிறுவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்களில் ஏற்கெனவே ஒரு சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மற்ற இரண்டு சிறுவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கீழே கிடந்த நாட்டு வெடிகுண்டை, ’பந்து’ என நினைத்து கையில் எடுத்து விளையாடியபோது வெடித்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

அதேநேரத்தில், இந்த சம்பவத்திற்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே காரணம் என பாஜக எம்.பி. லாக்கெட் சாட்டர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.

இதையும் படிக்க: மலேசிய கால்பந்து வீரர் மீது ‘ஆசிட் வீச்சு’ - ஒரே வாரத்தில் இரண்டாவது கால்பந்து வீரர் மீது தாக்குதல்!

வெடிகுண்டு
ஆசையாக எடுத்து விளையாடிய பிஞ்சுகள்; கண்ணிவெடிக்கு 9 குழந்தைகள் பலி.. ஆப்கனில் துயர சம்பவம்!

பாண்டுவா நகரத்தில் திரிணாமுல் காங்கிரசின் மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜியின் பிரசாரத்திற்கு முன்னதாக ஆளுங்கட்சியின் அச்சுறுத்தும் அரசியல் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “அப்பாவி சிறுவர்களின் குடும்பங்களுக்கு நீதி வேண்டும். இந்தச் சம்பவத்தில் நீதி விசாரணை வேண்டும். இதுகுறித்து NIA விசாரணை தேவை” என்றார்.

இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் திரினாங்கூர் பட்டாச்சார்யா, ”இந்த விபத்து துரதிருஷ்டவசமானது. இந்த விபத்துக்கும் அரசியலுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லாக்கெட் சாட்டர்ஜி குழந்தையின் இறப்பைவைத்து அரசியல் செய்ய விரும்புகிறார். மேற்கு வங்கத்தில் ஒவ்வொரு குண்டுவெடிப்பு சம்பவங்கள் குறித்தும் பாஜக NIA விசாரணையை நாடுகிறது” எனப் பதிலளித்துள்ளார்.

இதையும் படிக்க: பிறப்புறுப்பில் தாக்கிய பந்து.. சுருண்டு விழுந்த சிறுவன் பலி.. மகாராஷ்டிராவில் நிகழ்ந்த சோகம் #Video

வெடிகுண்டு
கால்பந்து மேட்ச்சைப் பார்க்க ஓட்டம்.. கண்ணிவெடியில் கால்வைத்து 3 குழந்தைகள் பலி.. பாகி. துயர சம்பவம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com