கால்பந்து மேட்ச்சைப் பார்க்க ஓட்டம்.. கண்ணிவெடியில் கால்வைத்து 3 குழந்தைகள் பலி.. பாகி. துயர சம்பவம்

அண்டை நாடான பாகிஸ்தானில் கண்ணிவெடியை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே 3 குழந்தைகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கண்ணிவெடி
கண்ணிவெடிட்விட்டர்

அண்டை நாடான பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து கூட்டணி அரசை அமைத்துள்ளன. அந்த வகையில், முன்னாள் பிரதமரான ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ளார். இந்த நிலையில், அந்நாட்டில் கண்ணிவெடி தாக்குதலில் 3 குழந்தைகள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானின் கைபர் பக்டுங்க்வா மாகாணத்தில் உள்ள தெற்கு வாசிரிஸ்தான் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 12) உள்ளூர் அணிகளுக்கு இடையிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியை காண வான்னா டவுன் பகுதியைச் சேர்ந்த 4 குழந்தைகள் சென்றனர். அவர்கள் நடந்து சென்றுகொண்டிருந்தபோது தரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி மீது தவறுதலாக கால்வைத்ததால், அது வெடித்துச் சிதறியது. இதில் 3 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த மற்றொரு குழந்தையை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த இடத்தில் கண்ணிவெடியை பதுக்கி வைத்தது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் கிழக்கு ஆப்கானிஸ்தானின் கஸ்னி மாகாணத்தில் உள்ள ஜெரோ மாவட்டத்தில் 5 முதல் 10 வயதுடைய 9 குழந்தைகள் கண்ணிவெடி ஒன்றை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது அது திடீரென வெடித்ததில் அங்கிருந்த 9 குழந்தைகளும் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மனைவியைப் பழிவாங்க 1 வயது குழந்தைக்கு பாதரச ஊசியைச் செலுத்திய தந்தை.. ஜெர்மனியில் அரங்கேறிய கொடூரம்!

கண்ணிவெடி
ஆசையாக எடுத்து விளையாடிய பிஞ்சுகள்; கண்ணிவெடிக்கு 9 குழந்தைகள் பலி.. ஆப்கனில் துயர சம்பவம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com