”மெரேஜ் செய்யலனா..” - டேட்டிங் ஆப் மூலம் பழகிய பெண்ணுக்கு ஆபாச வீடியோ காட்டி மிரட்டல்.. இளைஞர் கைது

சோஷியல் மீடியா மூலம் பலர் காதலித்து திருமணமும் செய்துக்கொண்டு மகிழ்சியான வாழ்க்கை நடத்தி வரும் இந்நிலையில், சோஷியல் மீடியாவால் சிலரின் வாழ்க்கை சீரழிந்தும் வரும் நிகழ்வும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
டேட்டிங் ஆப்
டேட்டிங் ஆப்web

டேட்டிங் செயலி மூலமாக பழகிய புதுச்சேரி பெண்ணை மிரட்டிய புகாரில் சென்னையைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரும் பழகிய போது வீடியோ கால் மூலம் எடுக்கப்பட்ட அரைநிர்வாண புகைப்படத்தை வைத்து மிரட்டியதாக எழுந்த புகாரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

புதுச்சேரியைச் சேர்ந்த 19 வயதான் இளம்பெண் ஒருவர் கிளப் ஹவுஸ் என்கிற டேட்டிங் செயலி மூலமாக சென்னையை சேர்ந்த திலிப் குமார் என்கிற வாலிபருடன் கடந்த 2022 பிப்ரவரி மாதம் முதல் பேசத் தொடங்கியுள்ளார். சிறிது காலம் சென்ற பின் இருவரும் நெருங்கி பழகி காதலர்களாக மாறியதாக கூறப்படுகிறது.

பின்னர் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்றவற்றில் தகவல்களை அவர்கள் இருவரும் பரிமாறிக் கொண்டுள்ளனர். இதனிடையே கடந்த சில வாரங்கள் முன்னர் லலிதாவிற்கும், திலீப் குமாருக்கும் இடையே மன கசப்பு ஏற்பட்டதை அடுத்து லலிதா நாம் காதலிக்க வேண்டாம், நண்பர்களாக பேசி கொள்ளலாம் என கூறியதாக தெரிகிறது.

இதற்கு மறுப்பு தெரிவித்த திலீப் குமார் ’நீ என்னிடம் பேசவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன், கையை அறுத்துக் கொள்வேன்’ என மிரட்டல் விடுத்ததில் பயந்து போயுள்ளார் அந்த பெண். திலீப் குமாரை உடனடியாக அப்பெண் தொடர்பு கொண்ட போது, அவர் ’நான் உன்னிடம் இனிமேல் பேச வேண்டாம் அல்லது உன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றால் நீ நிர்வாணமாக வீடியோ காலில் வந்து பேசினால் நான் தொந்தரவு செய்ய மாட்டேன்’ என்று தீலிப் கூறியதை நம்பிய அந்தப் பெண் நிர்வாணமாக வீடியோ காலில் பேசியிருக்கிறார்.

அப்போது அந்த போஃன் காலை ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்து பின்னர் அந்தப் பெண்ணிற்கு அந்த வீடியோவை திலீப்குமார் அனுப்பியுள்ளார். அந்த வீடியோ உடன் சேர்த்து ’என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் நிர்வாண வீடியோவை உன்னுடைய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவேன்’ எனவும் மிரட்டல் விடுத்து மெசேஜ் அனுப்பியுள்ளார்.

இதில் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் இது தொடர்பாக புதுச்சேரி சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் சைபர் க்ரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீலிப் குமாரை தேடி வந்தனர். இந்நிலையில் அவரது செல் போஃன் நெட்வெர்க் மூலம் சென்னை திருவெற்றியூரில் பதுங்கி இருந்த அவரை கைது செய்து புதுச்சேரிக்கு அழைத்து வந்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் காலாப்பட்டு மத்திய சிறையில் அவரை அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com