4 மாநில தேர்தல் | தெலங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை.. தொடர் பின்னடைவில் பிஆர்எஸ்!

4 மாநில சட்டப்பேரவைகளின் வாக்கு எண்ணிக்கையானது காலை 8 மணி அளவில் தொடங்கப்பட்ட நிலையில் தெலங்கானா தேர்தல் களத்தை பொறுத்தவரை தற்போது காங்கிரஸ் முன்னிலையிலும் பிஆர்எஸ் தொடர் பின்னடைவிலும் இருக்கிறது என்று தற்போதைய நிலவர முடிவுகள் தெரிவிக்கின்றன.

4 மாநில சட்டப்பேரவைகளின் வாக்கு எண்ணிக்கையானது காலை 8 மணி அளவில் தொடங்கப்பட்ட நிலையில் தெலங்கானா தேர்தல் களத்தை பொறுத்தவரை தற்போது காங்கிரஸ் முன்னிலையிலும் பிஆர்எஸ் தொடர் பின்னடைவிலும் இருக்கிறது என்று தற்போதைய நிலவர முடிவுகள் தெரிவிக்கின்றன.

119 தொகுதிகளை கொண்ட தெலங்கான சட்டமன்ற தேர்தலானது கடந்த நவம்பர் 30 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. மொத்தம் 71 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

காங்கிரஸ் முன்னிலை
காங்கிரஸ் முன்னிலை

தெலங்கானா தேர்தல் களத்தினை பொறுத்தவரை 60 தொகுதிகளில் வெற்றி பெற்றால் பெரும்பான்மை என்ற நிலையில் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக, ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிகளுக்கிடையே பயங்கர போட்டியானது நிலவி வருகிறது.

தற்போது தெலங்கான தேர்தல் களத்தில் ஆட்சி வகித்துவரும் பிஆர்எஸ் கட்சியானது ஆட்சியை பிடிக்குமா? என்று கேள்வி எழும்பிய நிலையில் தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் முன்னிலையிலும் பிஆர்எஸ் தொடர் பின்னடைவிலும் இருக்கிறது என்று முன்னிலை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய தெலங்கானா முதலமைச்சராக உள்ள சந்திரசேகர் ராவ் தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

தெலங்கானா தேர்தல்
முன்னணியில் பிஆர்எஸ்; முட்டி மோதும் காங்கிரஸ்; கோட்டுக்கு அந்தப்பக்கம் பாஜக- தெலங்கானா தேர்தல் களம்!

தற்போதைய நிலவரப்படி பின்னடைவை சந்தித்துள்ள தெலங்கானா முதலமைச்சரான கே.சி.ஆர், முதல்வராக பொறுப்பேற்ற பின் பல வகைகளில் மாற்றம் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது ஆட்சி காலத்தில் விவசாயம் அதிகளவில் நடக்கும் மாநிலம் என்பதால் நீர்ப்பாசன திட்டங்கள், விவசாயிகளுக்கான உதவித்தொகை திட்டங்கள் போன்றவை மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.

ரைத்து பந்து, தலித் பந்து, வீடற்றவற்களுக்கு 2 பிஹெச்கே வீடு கட்டிக்கொடுக்கும் திட்டம் போன்றவை அவரது அரசின் பாசிட்டிவ்களாக பார்க்கப்படுகிறது. ஆனாலும் வாரிசு அரசியல், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படாதது, கல்வித்துறையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படாதது, கல்வித்துறையில் தனியாரை ஊக்குவிப்பது போன்ற சில பிரச்சனைகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தெலங்கானா தேர்தல்
4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: நாளை தேர்தல் முடிவுகள்... ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்?

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தெலங்கானாவில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எப்போது வேண்டுமானாலும் முடிவுகள் மாறுபடும் என்ற நிலை இருப்பதால் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com