குடியுரிமை திருத்தச் சட்டம் | “தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் இடமளிக்காது” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

குடியுரிமையை பிறப்பின் மூலமாக, வம்சாவளியாக இருப்பதன் மூலமாக, பதிவு செய்யுறது மூலமாக என்று மட்டுமில்லாமல், குறிப்பிட்ட அந்த நாட்டின் அரசே, அந்த நாட்டின் குடியுரிமை பெறும் வழிகளை தளர்த்துவது மூலமாகவும் பெறலாம்.
CAA - முதல்வர் மு.க.ஸ்டாலின்
CAA - முதல்வர் மு.க.ஸ்டாலின்pt web

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) நேற்று (மார்ச் 11) அமல்படுத்தப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பை அரசிதழில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இச்சட்டத்துக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சிஏஏ (குடியுரிமைத் திருத்தச் சட்டம்) 2019 - என்பது என்ன?

பொதுவாக ஒரு நாட்டில் குடியுரிமை பெற்று வாழ்வதன் மூலமாக கிடைக்கும் உரிமைகளென பார்த்தால், ‘அந்த நாட்டுக்குள் எங்கே வேண்டுமானாலும் சுதந்திரமாக குடியேறலாம் - தகுதியை வளர்த்துக்கொண்டு அந்த நாட்டின் அரசு வேலையில சேரலாம் - எந்நேரம் வேண்டுமென்றாலும் நாடு கடத்தப்படுவோம் என்ற அச்சமின்றி நிம்மதியாக வாழலாம்’ ஆகியவைதான். இவை எல்லாவற்றுக்கும் மேல், வாக்குரிமை மூலமாக, அந்த நாட்டை யார் ஆள வேண்டும் என்பதை அந்நபர் முடிவு செய்யலாம்.

இப்படிப்பட்ட குடியுரிமையை பிறப்பின் மூலமாக, வம்சாவளியாக இருப்பதன் மூலமாக, பதிவு செய்யுறது மூலமாக என்று மட்டுமில்லாமல், குறிப்பிட்ட அந்த நாட்டின் அரசே, அந்த நாட்டின் குடியுரிமை பெறும் வழிகளை தளர்த்துவது மூலமாகவும் பெறலாம். அப்படியாக இந்திய குடியுரிமையை பெற இந்திய அரசு ஏற்படுத்தியிருக்கும் சில தளர்வுகள்தான் குடியுரிமைத் திருத்தச் சட்டம்.

CAA - முதல்வர் மு.க.ஸ்டாலின்
CAA | குடியுரிமை திருத்தச் சட்டம் | எதிர்ப்பு கிளம்பியது ஏன்? சட்டம் சொல்வது என்ன?
நேற்று இது நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட நிலையில், இச்சட்டம் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டுமொரு முறை கூறியுள்ளார்.
CAA - முதல்வர் மு.க.ஸ்டாலின்
“தேர்தலை மையப்படுத்தியே சிஏஏ சட்டம் அமலுக்கு வந்துள்ளது” - எதிர்க்கட்சிகள் விமர்சனம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில்,

“நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய இறுதி நாட்களில் ஒன்றிய பா.ஜ.க அரசு இருந்துவரும் வேளையில், பல்வேறு தரப்பு மக்களாலும் எதிர்க்கப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்திட அவசர கதியில் நேற்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல.

பலவகையான மொழி, இன, மதம் மற்றும் வாழ்விட சூழல் ஆகியவற்றால் வேறுபட்டிருந்தாலும், ஒன்றுபட்ட உணர்வுடன் வாழ்ந்துவரும் இந்திய மக்களின் நலனுக்கும், இந்திய தாய்த் திருநாட்டின் பன்முகத் தன்மைக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் முற்றிலும் எதிரானதாகும்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதிய தலைமுறை

அதுமட்டுமல்ல சிறுபான்மை சமூகத்தினர் மற்றும் முகாம்வாழ் தமிழர்களின் நலனுக்கும் எதிரானதுதான் இந்தச் சட்டம். இதன் காரணமாகத்தான் கழக அரசு அமைந்தவுடனேயே, அதாவது, கடந்த 8-9-2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, அரசின் சார்பாக நான் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து, அதனை நிறைவேற்றி, இச்சட்டத்தினைத் திரும்பப் பெறவேண்டுமென வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு அதனை அனுப்பி வைத்தோம். தமிழ்நாட்டைப் போலவே பல்வேறு மாநிலங்களும் இதனை எதிர்த்து குரல் கொடுத்து வந்துள்ளன.

CAA - முதல்வர் மு.க.ஸ்டாலின்
“தமிழ்நாட்டில் CAA கால்வைக்க விடமாட்டோம்” - முதலமைச்சர் உறுதி

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திலிருந்து தப்பிப்பதற்காக மக்களை திசைதிருப்பும் நோக்கத்துடன் தேர்தல் அரசியலுக்காக இந்தச் சட்டத்தை தற்போது நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளதோ என கருத வேண்டியிருக்கிறது.

இந்திய மக்களிடையே பேதங்களைத் தோற்றுவிக்க வழிவகை செய்யும் இந்தச் சட்டத்தால் எந்தவிதமான நன்மையோ, பயனோ இருக்கப் போவதில்லை. இந்தச் சட்டம் முற்றிலும் தேவையற்ற ஒன்று என்பதுடன் இரத்து செய்யப்பட வேண்டியது என்பதுதான் இந்த அரசின் கருத்தாகும்.

எனவே, ஒன்றிய அரசு நிறைவேற்றியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் இடமளிக்காது. இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது என்பதனை தமிழ்நாட்டு மக்களுக்கு நான் இந்த நேரத்தில் உறுதியாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com