ராஜஸ்தானில் முதல் -மந்திரி பஜன்லால் சர்மா
ராஜஸ்தானில் முதல் -மந்திரி பஜன்லால் சர்மா file image

ராஜஸ்தான்: முதல்முறை எம்.எல்.ஏ.. முதல்வராக தேர்வு செய்யப்பட்ட பஜன்லால் சர்மா; பின்னணி என்ன?

இராஜஸ்தான் முதல்-மந்திரியாக பஜன்லால் சர்மா பொறுப் பேற்றுக்கொண்ட சம்பவம் பாஜக மூத்த தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களும், அடுத்த வருடம் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டம் என்பதால் இரு தேசிய காட்சிகளும், ஆட்சியைப் பிடிக்கத் தீவிரமாகக் களமிறங்கித் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி இறைத்தன. ஆனாலும், "மக்கள் தங்களுக்கு யார் முதல்வராக வேண்டும் என்பதில் தெளிவாக இருந்து" தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்து முதல்வர்களைத் தேர்வு செய்தனர். இந்த தேர்தல் முடிவுகளை ஒட்டு மொத்த இந்திய மக்களும் உன்னிப்பாகக் கவனித்து வந்தனர்.

பாஜக தனது வியூகங்களை வகுத்துத் தேர்தலைச் சந்தித்தது. அதற்கு இணையாகக் காங்கிரஸும் தங்களுடைய தேர்தல் வியூகங்களை வகுத்துத் தேர்தலைச் சந்தித்த போதிலும் பாஜக கடுமையான அடியை, காங்கிரசுக்குக் கொடுத்து தங்களுடைய பலத்தை நிரூபித்துள்ளது. அதாவது ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்து முடிந்த தேர்தலில் 3 மாநிலங்களில் பாஜகவும் ஒரு மாநிலத்தில் காங்கிரசும் தங்களுடைய காலடித் தடத்தைப் பதித்து வெற்றி வாகை சூட்டியுள்ளன.

இந்தநிலையில் பாஜக வெற்றி பெற்ற மாநிலங்களில் புது புது தலைவர்களுக்கு முதலமைச்சர் வாய்ப்பு கொடுத்துக் களமிறக்கி வருகின்றது. இதனால் பாஜகவில் உள்ள பல மூத்த தலைவர்கள் அதிருப்தியிலிருந்து வந்தாலும் பாஜக தன்னுடைய முடிவுகளிலிருந்து மாறாமல் இருந்து வருகிறது. இதனைப் பிரதிபலிக்கும் விதமாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் பல பாஜக மூத்த தலைவர்கள் இருந்த போதிலும் அவர்களை ஓரங்கட்டிவிட்டு முதல் மந்திரியாக "மோகன் யாதவை" நியமித்தது அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

ராஜஸ்தானில் முதல் -மந்திரி பஜன்லால் சர்மா
மளிகைக்கடைக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 70வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் கைது

இது ஒருபுறம் இருக்க 199 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 115 இடங்களை பிடித்து பாஜக தனிபெருன்பான்மையுடன் தனது காலடித் தடத்தை மீண்டும் ராஜஸ்தானில் பதித்தது. இதனையடுத்து ராஜஸ்தான் முதல் மந்திரி யார் என்று எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த மக்களிடம் இருந்து வந்தது.

இந்தநிலையில், முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்கான எம்.எல்.ஏக்கள் கூட்டம் மேலிடப் பார்வையாளரான மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ராஜஸ்தான் முதலமைச்சராக பஜன்லால் சர்மாவை முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் பஜன்லால் முதல் மந்திரியாகத் தேர்வு செய்யப்பட்டு மூத்த தலைவர்களிடம் ஆசி பெற்றார். ராஜஸ்தான் துணை முதல்வர்களாக தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைரவா ஆகிய இருவரும், சபாநாயகராக "வாசுதேவ் தேவ்நானியும்" தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பஜன்லால் சர்மா
பஜன்லால் சர்மா

ராஜஸ்தானின் முதலமைச்சர் பதவிக்கு பா.ஜ.க.வில் உள்ள பல தலைவர்களின் பெயர்கள் பேசப்பட்டு வந்த நிலையில் முதல் முறை எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பஜன்லால் சர்மாவுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது. அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் முதல் -மந்திரி பஜன்லால் சர்மா
EXCLUSIVE: ரோந்து பணியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்கள்.. போர்க்களத்தில் புதிய தலைமுறை!

எம்.எல் .ஏ ஆனவுடன் பஜன்லால் சர்மா எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் ஓடிக்கொண்டே இருக்கிறது. ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் சங்கனேர் தொகுதியிலிருந்து பாஜக சார்பில் போட்டியிட்டு ராஜஸ்தான் சட்டமன்றத் தொகுதிக்கு முதன் முறையாகச் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எம். எல்.ஏ வாக தேர்தெடுக்கப்பட்ட உடனே ராஜஸ்தான் மாநிலத்தின் 14வது முதல்-மந்திரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா
பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா

பாஜகவின் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்ந்து வரும் இவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு நெருக்கமானவர் எனக் கூறப்படுகிறது. பஜன்லால் சர்மா ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் எம்.ஏ. பட்டம் பெற்றுள்ளார். தன்னுடைய தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் கூறியது போல அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.1.4 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது. இவர் பணி செய்து கொண்டிருந்த அரசு ஊழியரைக் கடமையைச் செய்யவிடாமல் தடுத்து நிறுத்தியதாகக் கூறி அவர் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் முதல் -மந்திரி பஜன்லால் சர்மா
ரயில் வரும் நேரத்தில்.. தண்டவாளத்தில் ஒருவர் செய்த அதிர்ச்சி காரியம்; பெண் காவலரின் துணிச்சலான செயல்

ராஜஸ்தான் மாநிலம், சங்கனேர் தொகுதியில், இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸின் புஷ்பேந்திர பரத்வாஜை 48,081 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். நீண்ட காலமாக ஆர்.எஸ்.எஸ் லும், அகில் பாரதிய வித்தியார்த்தி பரிஷத் அமைப்புகளுடன் தொடர்பிலிருந்து மட்டும் இல்லாமல் பாஜகவின் தேர்தல் மேலாண்மை குழுவிலும் பணியாற்றியுள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

சங்கனேர் தொகுதியில் ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக இருந்த அசோக் லஹோட்டிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்காமல், பஜன்லால் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அசோக் லஹோட்டின் ஆதரவாளர்கள் பாஜக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

தற்போது எம்.எல்.ஏ.வாக தேர்தெடுக்கப்பட்ட இவர் ஏற்கனவே இரண்டு முறை முதலமைச்சராக இருந்த, பாஜக மூத்த தலைவரான வசுந்தரா ராஜே சிந்தியாவை பின்னுக்குத் தள்ளி ராஜஸ்தான் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com