விஜய் மல்லையா மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்
வங்கிக்கடன் மோசடி புகாரில் சிக்கியுள்ள விஜய் மல்லையா மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
17 வங்கிகளில் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் கடனாக பெற்று மோசடி செய்ததாக தொழிலதிபர் விஜய் மல்லையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இங்கிலாந்தில் வசித்துவரும் மல்லையா மீது ஒரு மாதத்திற்குள் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய அதிக வாய்ப்புகள் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read Also -> கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்
கடனை திருப்பி செலுத்தும் தகுதி இருந்தும், வேண்டுமென்றே கடனை செலுத்தவில்லை என்றும் திட்டம் போட்டு அவரின் குழும நிறுவனங்கள் வங்கிகளை ஏமாற்றி உள்ளதாகவும் சிபிஐ தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது. சிபிஐ தாக்கல் செய்யவுள்ள இக்குற்றப்பத்திரிகையில் வங்கி அதிகாரிகளின் பெயர்களும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.