[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு
  • BREAKING-NEWS 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக
  • BREAKING-NEWS விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி63 படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு - விஜய் நடிக்கும் 63வது படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் செல்வா என்பவர் வழக்கு
  • BREAKING-NEWS அமமுக கடைசிவரை குழுவாக மட்டுமே இருக்க முடியும்; கட்சியாக மாற வாய்ப்பில்லை - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளில் 75.57% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ

சாதி ஒழிப்பும் பெண் விடுதலையும் : பெரியாரின் 140ஆவது பிறந்த நாள்

periyar-e-v-ramasamy-140th-birthyday

பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி என்று தனது கடைசி காலம் வரை முழங்கிய பெரியாரின் 140ஆவது பிறந்த நாள் இன்று. 

சமூகத்தில் மிகப்பெரும் மாற்றங்களை நிகழ்த்திய பெரியார் சமகால வாழ்க்கையுடனும், அரசியலுடனும் ஒத்துப் போகிறார் என்றால் அது மிகையல்ல!

Read Also -> பெரியார் சிலை மீது காலணி வீச்சு.. திருமாவளவன் போராட்டம்

'தாழ்ந்து கிடக்கும் மக்களை பகுத்தறிவு உயர்த்தும்' நான் சொல்வதை அப்படியே நம்பாதீர்கள், உங்களுக்கு சரி என்று பட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று எல்லாக் கூட்டங்களிலும் கூறிய பெரியார் மாற்றுக்கருத்தையும் மதித்‌து பதில் அளிக்கும் பண்புடையவர்.  ஈரோடு வெங்கடப்பன் ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட இவர் பெண்ணடிமைத் தனம் குறித்து மாபெரும் பிரச்சாரம் செய்ததற்காக பெண்களால் கொடுக்கப்பட்ட பட்டம் தான் பெரியார்.

Read Also -> “என் அப்பாவும், முன்னாள் எம்எல்ஏவும் தான் காரணம்”... போட்டுடைத்த அம்ருதா..!

1879ஆம் ஆண்டு இதே நாள் ஈரோட்டில் பிறந்த பெரியார் தனது இறுதி மூச்சு வரை சாதிய ஏற்றத்தாழ்வை அகற்றவும், பெண் அடிமைத்தனத்தை களையவும், மூட நம்பிக்கைகளை நீக்கவும் பாடு‌பட்டார். தனது 25 வயதில் பெரியார் மேற்கொண்ட காசி பயணம் அவருள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் இறை மறுப்பு கொள்கையை கடைபிடிக்கத் தொடங்கிய பெரியார் பெண் விடுதலை இல்லையேல், ஆண் விடுதலை இல்லை என்ற சிந்தனையை விதைத்து, சாதிய ஒழிப்புடன் பெண் விடுதலையையும் சேர்த்துக்கொண்டார். 

Read Also -> ஹெச்.ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு ஆதரவாக வைக்கம் போராட்டம் நடத்திய பெரியார், 1925 இல் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். அதன் பின்னர் பெரியார் மேற்கொண்ட வெளிநாட்டு பயணம் அவரது கருத்துகளுக்கு வலு சேர்ப்பதாக அமைந்தது. கல்வி அறி‌வும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவு தன்மையுமே தாழ்ந்துகிடக்கும் மக்களை உயர்த்தும் என்பதில் பெரியார் உறுதியாக இருந்தார். கடவுள் மறுப்பு, பெண்கள் முன்னேற்றம், மூட நம்பிக்கை குறித்து அச்சமின்றி கருத்துகளை பதிவு செய்த பெரியார் மீது பல்வேறு விமர்சனங்கள் இப்போதும் உண்டு. ஆனால் சமூக மாற்றத்தில் பெரியாருக்கு பெரும் பங்குண்டு என்பதையும், அவர் இன்றும் தேவைப்படுகிறார் என்ற கருத்தையும் யாராலும் மறுக்க முடியாது. 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close