காங்கிரஸ் தேர்தல் அறிக்கை - முக்கிய அம்சங்களை செயல்படுத்த எவ்வளவு செலவாகும்? ஓர் அலசல்!

காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற எவ்வளவு செலவாகும் என்பது குறித்த ஓர் ஆய்வுத்தொகுப்பு
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
காங்கிரஸ் தேர்தல் அறிக்கைபுதிய தலைமுறை

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏழைக்குடும்ப பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் வறுமை நிலையில் இருப்பவர்கள் 3 கோடி என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் இதன்படி பார்த்தால் ஒரு லட்சம் ரூபாய் தரும் திட்டத்தை நிறைவேற்ற ஆண்டுக்கு சுமார் 4 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது.

மக்களவை தேர்தல் 2024 | காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
மக்களவை தேர்தல் 2024 | காங்கிரஸ் தேர்தல் அறிக்கைட்விட்டர்

விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்தும் வாக்குறுதியை நிறைவேற்ற 2 முதல் 3 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவக்காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆண்டுக்கு 7 ஆயிரத்து 500 கோடி ரூபாயை அரசு ஒதுக்குகிறது.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
பாஜக தேர்தல் அறிக்கை - முக்கிய அம்சங்களை செயல்படுத்த எவ்வளவு செலவாகும்? ஓர் அலசல்!

இந்நிலையில் இலவச மருத்துவக்காப்பீட்டு வரம்பை 25 லட்சம் ரூபாயாக உயர்த்துவோம் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. அவ்வாக்குறுதியை நிறைவேற்ற ஆண்டுக்கு 38 ஆயிரம் கோடி ரூபாய் வரை தேவைப்படும் என மதிப்பிடப்படுகிறது.

மக்களவை தேர்தல் 2024 | காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
மக்களவை தேர்தல் 2024 | காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தினசரி ஊதியம் 400 ரூபாய் ஆக்கப்படும் என காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. தற்போது சராசரியாக 260 ரூபாய் ஊதியம் வழங்கப்படும் நிலையில் அதற்கு 86 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஊதியம் 400 ரூபாய் ஆக்கப்படும் பட்சத்தில் ஒரு லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய் அதாவது கூடுதலாக 46 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
பாஜக Vs காங்கிரஸ்: தேர்தல் அறிக்கை ஒப்பீடு!

காங்கிரசின் வாக்குறுதிகளை நிறைவேற்ற தற்போதைய செலவில் 17% முதல் 30% கூடுதலாக தேவைப்படும் என பிரபல பொருளாதார நிபுணர் சுர்ஜித் பல்லா தெரிவித்துள்ளார்.

பொருளாதார நிபுணர் சுர்ஜித் பல்லா
பொருளாதார நிபுணர் சுர்ஜித் பல்லா

கட்சிகளின் வாக்குறுதிகள் மக்கள் நலனை முன்னிறுத்தினாலும் அரசின் நிதிப்பற்றாக்குறை 18 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் நிலையில் இது போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவது சவாலான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com