பாஜக Vs காங்கிரஸ்: தேர்தல் அறிக்கை ஒப்பீடு!

சங்கல்ப் பத்ரா என்ற பெயரில் பாஜகவும், நியாய் தர்பார் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன. இரு கட்சிகளின் முக்கியமான வாக்குறுதிகளை ஒப்பிட்டு பார்க்கலாம்.
பாஜக Vs காங்கிரஸ்: தேர்தல் அறிக்கை ஒப்பீடு!
பாஜக Vs காங்கிரஸ்: தேர்தல் அறிக்கை ஒப்பீடு!புதிய தலைமுறை

பாஜக Vs காங்கிரஸ்: தேர்தல் அறிக்கை ஒப்பீடு!

இலவச ரேஷன் அரிசி திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று பாஜகவும், நூறு நாள் வேலைத்திட்ட ஊதியம் 400 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சியும் கூறியுள்ளன.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மேலும் மூன்று கோடி வீடுகள் கட்டப்படும் என்றும், 30 லட்சம் மத்திய அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் பாஜக உறுதியளித்துள்ள நிலையில், அங்கன்வாடி பணியிடங்களை இரட்டிப்பாக்கி 14 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் - பாஜக
காங்கிரஸ் - பாஜக முகநூல்

பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கொண்டுவரப்படும் என பாஜக கூறியுள்ள நிலையில், நாடு முழுவதும் சமூக-பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் உறுதியளித்துள்ளது.

பாஜக Vs காங்கிரஸ்: தேர்தல் அறிக்கை ஒப்பீடு!
இரவு 10 மணிக்கு மேல் பரப்புரை... பாஜக வேட்பாளர் அண்ணாமலை வாகனத்தை வழிமறித்த காவல்துறை!

கிராமப் புறங்களில் உள்ள 3 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக உருவாக்கப்படுவார்கள் என்று பாஜக வாக்குறுதி அளித்துள்ள நிலையில், ஏழைப் பெண்களுக்கு மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என காங்கிரஸ் கூறியுள்ளது.

முகநூல்

முத்ரா கடன் வரம்பு 10 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாயாக நீட்டிக்கப்படும் என பாஜக உறுதியளித்துள்ள நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

பாஜக Vs காங்கிரஸ்: தேர்தல் அறிக்கை ஒப்பீடு!
பாஜக தேர்தல் அறிக்கை - முக்கிய அம்சங்களை செயல்படுத்த எவ்வளவு செலவாகும்? ஓர் அலசல்!

மக்கள் மருந்தகங்களில் 80 சதவிகித தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் பாஜக கூறியுள்ளது. அதேநேரத்தில் பணமில்லா காப்பீடு முறை 25 லட்சம் ரூபாய் வரையில் நீட்டிக்கப்படும் என காங்கிரஸ் உறுதியளித்துள்ளது.

70 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் காப்பீடு வழங்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதேபோல், மூத்த குடிமக்களுக்கு பொது போக்குவரத்திலும் ரயில் பயணங்களிலும் பயணச் சலுகைகள் மீண்டும் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

சிறப்பு ரயில்
சிறப்பு ரயில்முகநூல்

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் வலுப்படுத்தப்படும் என பாஜகவும், விவசாயிகள் விளைபொருட்களை விற்பதற்காக நேரடி சந்தைகள் அமைக்கப்படும் என்று காங்கிரஸூம் கூறியுள்ளன.

மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி சிறப்பு திட்டம் தொடங்கப்படும் என பாஜக கூறியுள்ளது. அதேபோல், மீனவர்கள் பிரச்னைகளை தீர்க்க அண்டை நாடுகளுடன் புதிய வழிமுறைகள் உருவாக்கப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

பாஜக Vs காங்கிரஸ்: தேர்தல் அறிக்கை ஒப்பீடு!
’ஒரே நாடு ஒரே தேர்தல்’ to ’3 கோடி ’பெண்களை லட்சாதிபதிகளாக்க இலக்கு’-பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு!

ஒரே நாடு, ஒரே மாணவர் அடையாள அட்டை கொண்டுவரப்படும் ஒவ்வொரு மாணவரும் உயர்தர கல்வியை பெறுவதை உறுதி செய்வோம் என பாஜகவும், மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும், நீட், க்யூட் (CUET) போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்தி கொள்ளலாம் என்று காங்கிரஸூம் தெரிவித்துள்ளன.

தேர்தல் நேரத்தில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பெரும் விவாதம் எழுந்த நிலையில், பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் அதுகுறித்து தேர்தல் அறிகையில் எதுவும் சொல்லவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com