பாஜக தேர்தல் அறிக்கை - முக்கிய அம்சங்களை செயல்படுத்த எவ்வளவு செலவாகும்? ஓர் அலசல்!

பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள சில முக்கிய அம்சங்களை செயல்படுத்த எவ்வளவு தொகை செலவாகும் என்பது குறித்த ஒரு ஆய்வுத் தொகுப்பு.
பாஜக தேர்தல் அறிக்கை
பாஜக தேர்தல் அறிக்கைட்விட்டர்

பாஜக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள் குறித்தும், அவற்றை செயல்படுத்த அரசுக்கு எவ்வளவு தொகை செலவாகும் என்பது குறித்தும் ஒரு ஆய்வுத் தொகுப்பு இங்கே...

நாடெங்கும் ஏழை குடும்பங்களுக்கு ரேஷனில் இலவச அரிசி வழங்கும் திட்டம் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அது மேலும் நீட்டிக்கப்பட்டு கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்தது.

பாஜக தேர்தல் அறிக்கை
பாஜக தேர்தல் அறிக்கைமக்களவை தேர்தல் 2024

இந்நிலையில் அத்திட்டத்தை மேலும் நீட்டிக்க கடந்த டிசம்பரிலேயே மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அந்த அறிவிப்புதான் தற்போதைய தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற்றுள்ளது.

இலவச அரிசி திட்டம் மேலும் 5 ஆண்டுகள் நீடிக்கப்படுவதால் அரசுக்கு கூடுதலாக 11 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும்.

மேலும் ரேஷனில் இரும்புச்சத்து, வைட்டமின்கள் உள்ளிட்டவை சேர்க்கப்பட்ட சத்தூட்டப்பட்ட அரிசிதான் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. சாதாரண அரிசியை சத்தூட்டப்பட்ட அரிசியாக மாற்ற ஆண்டுக்கு 2,700 கோடி ரூபாய் செலவாவது குறிப்பிடத்தக்கது.

2) பாஜக தேர்தல் அறிக்கையில் மற்றொரு முக்கிய அம்சம் 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக தேர்தல் அறிக்கை
பாஜக தேர்தல் அறிக்கைமக்களவை தேர்தல் 2024

5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ செலவுகளுக்கு இலவச சிகிச்சை பெற உதவும் இந்த திட்டத்தில் தற்போது 34 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இத்திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் 7,500 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இதன்படி, ஒவ்வொரு பயனாளிக்கும் சுமார் 220 ரூபாயை அரசு பிரிமியமாக செலுத்துவது தெரியவருகிறது. 70 வயதுக்கு மேல் சுமார் 6 கோடி பேர் உள்ள நிலையில் அவர்களையும் இத்திட்டத்தில் சேர்க்கும் பட்சத்தில் கூடுதலாக 1,900 கோடி ரூபாய் தேவைப்படும்.

பாஜக தேர்தல் அறிக்கை
பாஜக தேர்தல் அறிக்கைமக்களவை தேர்தல் 2024

3) சிறுதொழில் முனைவோரை உருவாக்க உதவும் முத்ரா கடன் திட்ட வரம்பு 10 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 46 கோடி கணக்குகளுக்கு 27 லட்சம் கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. தற்போது இத்திட்டத்திற்காக ஆண்டிற்கு 5 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் நிலையில் புதிய அறிவிப்பின் காரணமாக ஒதுக்கீட்டுத்தொகை இரு மடங்கு வரை உயரக்கூடும் என கணிக்கப்படுகிறது.

கட்சிகளின் வாக்குறுதிகள் மக்கள் நலனை முன்னிறுத்தினாலும் அரசின் நிதிப்பற்றாக்குறை 18 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் நிலையில் இதுபோன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவது சவாலான ஒன்றாகவே பார்க்கப்படுகிது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com