தெலங்கானாவிலும் மோடியின் தாக்கம்! காங். ஆட்சியை பிடித்தாலும் பாஜகவுக்கு கூடிய கணிசமான வாக்குசதவீதம்!

"கடந்த 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் 118 இடங்களில் போட்டியிட்ட பாஜக வெறும் ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது. சுமார் 7 சதவீத வாக்குகளை பெற்றது"
telangana
telangana file image

4 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வரும் நிலையில், தெலங்கானாவை தவிர்த்து மற்ற மூன்று மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கிறது பாஜக. தெலங்கானாவிலும், பெற்ற வாக்குகளை பார்க்கையில் கடந்த தேர்தல் வாக்கு சதவீதத்திற்கும், இந்த தேர்தல் வாக்கு சதவீதத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

ஆம், கடந்த 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் 118 இடங்களில் போட்டியிட்ட பாஜக வெறும் ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது. சுமார் 7 சதவீத வாக்குகளை பெற்றது. அந்த தேர்தலில் போட்டியிட்ட தெலங்கானா ராஷ்டிர சமிதி 88 தொகுதிகளில் வென்று ஆட்சியமைத்தது. தொடர்ந்து, 2019ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 4 தொகுதிகளில் வென்ற பாஜக 10. 4 சதவீத வாக்குகளை பெற்றது.

telangana
“மதுரை அலுவலகத்தில் சோதனை நடத்தியது சட்டவிரோதம்”.. தமிழக டிஜிபி அலுவலகத்தில் அமலாக்கத் துறை புகார்!

இந்நிலையில், இந்த முறை 111 தொகுதிகளில் போட்டொயிட்ட பாஜக மொத்தமாக 9 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. வாக்கு சதவீதமும் சுமார் 14 சதவீதத்தை எட்டிப்பிடித்துள்ளது. இதன்மூலம் சுமார் 3 சதவீத வாக்குகளை கூடுதலாக பெற்று தெலங்கானாவில் சற்று ஆழமாக காலூன்றியுள்ளது பாஜக. தென் மாநிலங்களில் பாஜக அரசு மொத்தமாக துடைத்தெறியப்பட்டாலும், வாக்கு சதவீதத்தை உயர்த்தி வருகிறது.

அதேபோல் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்து முடிந்து கர்நாடக தேர்தலிலும் 36 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது பாஜக. கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் அடுத்தடுத்து காங்கிரஸ் ஆட்சியமைத்து வரும் நிலையில், பாஜகவும் தனது வாக்குவங்கியை உயர்த்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.

telangana
மத்திய பிரதேசத்தில் 5வது முறையாக ஆட்சியமைக்கும் பாஜக! காங். மிகப்பெரிய தோல்வியை சந்திந்தது எப்படி?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com