மத்திய பிரதேசத்தில் 5வது முறையாக ஆட்சியமைக்கும் பாஜக! காங். மிகப்பெரிய தோல்வியை சந்திந்தது எப்படி?

"ஒரு காலகட்டத்தில் காங்கிரஸ் மட்டுமே ஆண்ட மத்தியப்பிரதேசத்தை, 2003ம் ஆண்டுக்குப் பிறகு 15 ஆண்டுகளுக்கு ஆண்டது பாஜக. 2018ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வென்றாலும், ஜோதி ஆதித்யா சிந்தியாவின் பிளவால் ஆட்சியை இழந்தது காங்கிரஸ்"
rahul vs modi
rahul vs modifile image

4 மாநில தேர்தல் முடிவுகள் சுடச்சுட வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், மத்தியப்பிரதேசத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது பாஜக. மதியம் 1.30 மணி நிலவரப்படி 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. ஒரு காலகட்டத்தில் காங்கிரஸ் மட்டுமே ஆண்ட மத்தியப் பிரதேசத்தை, 2003ம் ஆண்டுக்குப் பிறகு 15 ஆண்டுகளுக்கு ஆண்டது பாஜக.

2018ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வென்றாலும், ஜோதி ஆதித்யா சிந்தியாவின் பிளவால் ஆட்சியை இழந்தது காங்கிரஸ். இதனால், 2020ம் ஆண்டு 4வது முறையாக ஆட்சிப்பொறுப்பேற்றார் சிவராஜ் சிங் சவுகான். இப்போதைய தேர்தல் நிலவரப்படி பாஜக 5வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.

rahul vs modi
முதல்முறையாக சாதித்து காட்டிய எம்.ஜி.ஆர்: ஹாட்ரிக் வாய்ப்பை கோட்டைவிட்ட கேசிஆர்! சறுக்கியது எங்கே?

ஓபிசி மற்றும் யாதவ் பிரிவு வாக்குகள் கணிசமாக இருக்கும் மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் கூட்டணி வைக்காமல் தனியாக களம் கண்டதுதான் தோல்வி முகத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

சமாஜ்வாதி மற்றும் ஆம் ஆத்மி போன்ற கட்சிகளோடு கூட்டணி வைத்திருந்தால், கணிசமான வாக்குகள் பிரிந்திருக்கும் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக 26 கட்சிக இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ள நிலையில், அது சட்டமன்ற தேர்தலுக்கு பொருந்ததாது என்பது போன்று நடந்துகொண்டுள்ளது காங்கிரஸ்.

கடந்த முறை தோற்றபோது 38, 71 மற்றும் 58 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் தற்போது 70 தொகுதிகளில் முன்னிலை வைத்து வரும் நிலையில், கூட்டணி அமைக்காததும் தோல்வி முகத்திற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவும் காங்கிரஸை விமர்சித்து இருருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் தந்திரத்திற்கு பெயர் போனது. அதை ஏமாற்றிவிட்டால் நம்மால் யாரையும் ஏமாற்ற முடியும் என்றும் அகிலேஷ் காட்டமாக கூறியிருந்தார்.

ஆகமொத்தம் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு பட்டமேற்படிப்பு வரை இலவச கல்வி, இலவச மின்சாரம், 450 ரூபாய்க்கு சிலிண்டர் போன்ற கவர்ச்சிகர வாக்குறுதிகளும் பாஜகவின் வெற்றிப்பாதைக்கு கைகொடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்களை தேர்தல் களத்தில் களமிறக்கியதும் பாஜகவுக்கு கைகொடுத்துள்ளதாக தெரிகிறது.

பிரதமர் மோடியின் பிம்பத்தை முறையாக பயன்படுத்தியதோடு இதர மாநில தலைவர்களையும் சவுகான் ஒருங்கிணைத்தது சென்றதுபோல், கமல்நாத் ராகுல் காந்தியின் பணிகளை பயன்படுத்த தவறியதோடு இதர காங்கிரஸ் தலைவர்களையும், இளைஞர்களை ஒருங்கிணைத்து செல்ல தவறியதே தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

rahul vs modi
தொடங்கியது 4 மாநிலத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை! எங்கு என்ன நிலவரம்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com