அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்pt web

மக்களவை தேர்தல் முடிவுகள் | டெல்லியில் ஆம் ஆத்மி, காங்கிரஸை ஓரம் கட்டியதா பாஜக?

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொட்ரந்து வரும் நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி, காங்கிரஸை ஓரம் கட்டியிருக்கிறது பாஜக.
Published on

18ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

அரவிந்த் கெஜ்ரிவால்
🔴LIVE: தேர்தல் முடிவுகள் 2024 | பெரும்பான்மை பெற்ற NDA; Tough Fight கொடுத்த I.N.D.I.A! முழு விவரம்

இதில் ஆம் ஆத்மி ஆளும் தொகுதியான டெல்லியின் 7 தொகுதிகளிலும் பாஜகவே முன்னிலை வகித்து வருகிறது. டெல்லியில் மதுபான கொள்கை முறைகேட்டு வழக்கில் கைதான டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, இந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸூடன் கூட்டணி அமைத்துள்ளது.

இந்நிலையில் அங்கு இக்கூட்டணிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதன்படி ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி 1 இடத்தில்கூட (மதியம் 12 மணியளவில்) முன்னிலை இல்லை.

அரவிந்த் கெஜ்ரிவால்
மக்களவை தேர்தல் முடிவுகள் எதிரொலி: கடும் சரிவை சந்தித்து வரும் பங்குசந்தை!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com