மக்களவை தேர்தல் முடிவுகள் எதிரொலி: கடும் சரிவை சந்தித்து வரும் பங்குசந்தை!

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், பங்குசந்தை இன்று கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
பங்கு சந்தை
பங்கு சந்தைபுதிய தலைமுறை

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் உள்ள நிலையில், பங்குசந்தை இன்று கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

கடந்த சில நாட்களாக கருத்துக்கணிப்பின் அடிப்படையில் பாஜக மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் ஆகவே, அவர்களின் கொள்கையில் மாற்றம் ஏதும் வராது என்ற நிலையில் முதலீட்டாளர்கள் பங்குசந்தையில் அதிக கவனம் செலுத்தி வந்ததால், பங்கு சந்தையானது ஏற்றத்தை சந்தித்து புதிய உச்சத்தை தொட்டு இருந்தது. அதன்படி நேற்று தேசிய பங்குசந்தையான நிப்டி 23,263.90 புள்ளிகளும் மும்பை வர்த்தகமான சென்செஸ் 76468.78 புள்ளிகளில் வர்த்தகமானது முடிவடைந்திருந்தது.

பங்கு சந்தை
இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு காணாத உச்சம்! 'Exit Polls' குறித்து முதலீட்டாளர்கள் நினைப்பதென்ன?

இன்று வாக்கு எண்னிக்கை தொடங்கப்பட்ட நிலையில், எதிர்பார்த்தது போல அல்லாமல் பாஜக வெற்றி பெறும் வாய்ப்பிற்காக போராடி வருவதால், முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுகளை திரும்ப பெற்று வருவதாலும், தேர்தல் முடிவுகள் எதிரொலியாக பங்கு சந்தையானது வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதன்படி மும்பை பங்கு சந்தை 76,285.78 புள்ளிகளில் ஆரம்பிக்கப்பட்ட வர்த்தகமானது 2000 புள்ளிகள் சரிந்து 73659.29 புள்ளிகளில் வர்த்தகம் நடைப்பெற்று வருகிறது.

அதே போல் தேசிய பங்கு சந்தையான நிப்டி 23179.50 புள்ளிகளில் ஆரம்பிக்கப்பட்ட வர்த்தகமானது,900 புள்ளிகள் சரிந்து 22,277.75 புள்ளிகளில் வர்த்தகம் நடைப்பெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com