மொத்தம் ரூ.8250 கோடி... 2019 தேர்தல் நேரத்தில் மட்டும் ரூ.1771 கோடி! பாஜக பெற்ற நிதி - முழு விவரம்

2019 தேர்தல் காலக்கட்டமான ஏப்ரல் முதல் மே வரை மட்டும் ரூ.1771.5 கோடி ரூபாயை பாஜக பெற்றுள்ளது.
பிரதமர் மோடி, அமித்ஷா, தேர்தல் பத்திரம்
பிரதமர் மோடி, அமித்ஷா, தேர்தல் பத்திரம்pt web

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க பயன்படுத்தப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தை கடந்த பிப்ரவரி 15ம் தேதி உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை வெளியிட வேண்டும் எனவும் பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திர விவரங்களை, பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பித்தது. இந்நிலையில் தேர்தல் பத்திரம் தொடர்பான புதிய தரவுகளை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இந்த தரவுகள், தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகள் பெற்ற தொகையை குறிப்பிட்டு அக்கட்சிகளே தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய கடிதங்களின் தகவல்கள்.

உச்ச நீதிமன்றம், எஸ்.பி.ஐ.
உச்ச நீதிமன்றம், எஸ்.பி.ஐ.புதிய தலைமுறை

இதில், சில கட்சிகள் தங்களது நன்கொடையாளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளன. திமுக, அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் தாங்கள் எந்த நிறுவனங்களிடம் இருந்து, எவ்வளவு நிதி பெற்றன என்ற தகவல்களை அதில் தெரிவித்துள்ளன. பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பான்மை கட்சிகள் தாங்களுக்கு நிதிவழங்கிய நன்கொடையாளர்களின் பெயர்களைக் குறிப்பிடவில்லை. எந்தெந்த தேதிகளில், நிதிப் பத்திரங்கள் மூலம் நிதிபெற்றுள்ளன என்பதை மட்டும் குறிப்பிட்டுள்ளது.

பிரதமர் மோடி, அமித்ஷா, தேர்தல் பத்திரம்
தேர்தல் பத்திரம் | SBI Vs SC | 4 சட்டத்திருத்தங்கள்.. வாரிவழங்கிய நிறுவனங்கள்.. இதுவரை நடந்தது என்ன?

உச்சத்தில் ஆளும் பாஜக - மற்ற கட்சிகள் பெற்றது எவ்வளவு?

பாஜக மட்டும் கிட்டத்தட்ட ரூ. 8250.7 கோடி ரூபாய் நிதிப்பத்திரங்களின் மூலம் நிதியாக பெற்றுள்ளது. அனைத்து கட்சிகளும் நிதியாக பெற்ற மொத்த தொகையில் கிட்டத்தட்ட 50.1%.

இரண்டாம் இடத்தில் காங்கிரஸ் கட்சி மொத்தமாக ரூ.1951.7 கோடி ரூபாயை நிதிப்பத்திரங்களின் மூலம் நிதியாக பெற்றுள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் ரூ.1716.8 கோடி ரூபாயையும், பாரத் ராஷ்ட்ரிய சமிதி ரூ. 1408.2 கோடி ரூபாயையும் நிதியாக பெற்றுள்ளது.

பிஜூ ஜனதா தளம் ரூ.1019 கோடியும், திமுக ரூ.656 கோடியையும் நிதியாக பெற்றுள்ளது.

ஆண்டு வாரியாக பாஜக, காங்கிரஸ் பெற்ற நிதி!

ஆண்டு வாரியாக பார்த்தோமெனில் காங்கிரஸ், பாஜக என இரு கட்சிகளும் 2017 - 2018 நிதியாண்டுகளில் இருந்தே நிதிகளைப் பெற்று வந்துள்ளது.

  • 2017 -2018 ஆம் ஆண்டு நிதியாண்டில் பாஜக 210 கோடி ரூபாயும், காங்கிரஸ் 5 கோடி ரூபாயும் நிதியாக பெற்றுள்ளது. பிற கட்சிகள் 2018 -2019 ஆம் நிதியாண்டில் இருந்தே நிதிகளைப் பெற்றுள்ளன.

  • 2018-19 ஆம் ஆண்டு நிதியாண்டில் பாஜக ரூ.1450.9 கோடி ரூபாயை நிதியாக பெற்றுள்ளது.

  • 2019-20 ல் 2 ஆயிரத்து 555 கோடி பெற்ற நிலையில், 2022-23 ல் 1294 கோடி ரூபாய் நிதியாக பெற்றுள்ளது.

சுருக்கமாக, 2017 - 2018 நிதியாண்டு முதல் ஏப்ரல் 11, 2019 வரை சுமார் 2190.2 கோடிகளும், ஏப்ரல் 19 2020 ஆம் ஆண்டில் இருந்து பிப்ரவரி 2024 வரை சுமார் ரூ.6060 கோடிகளும் நிதியாக பெற்றுள்ளது. மொத்தம் ரூ.8250.7 கோடிகளை பாஜக நிதிப் பத்திரங்கள் மூலம் நிதியாக பெற்றுள்ளது.

தேர்தல் பத்திரம் - உச்சநீதிமன்றம்
தேர்தல் பத்திரம் - உச்சநீதிமன்றம்புதிய தலைமுறை

2018 ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் தேதி முதல் டிசம்பர் 7 ஆம் தேதி வரை மத்திய பிரதேசம், சத்திஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், தெலங்கானா என ஐந்து மாநில தேர்தல் நடந்தது. 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்தது. அதாவது, 2019 ஆம் ஆண்டில் ஏப்ரம் மாதம் 11 ஆம் தேதி முதல் மே மாதம் 19 ஆம் தேதி வரை நடந்தது. இக்காலக்கட்டத்தில், அதாவது ஏப்ரல் முதல் மே வரை மட்டும் ரூ.1771.5 கோடி ரூபாயை பாஜக பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com