\
agniveer
agniveerani

அக்னி வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி! அக்னிபாத் திட்டத்தில் அதிரடி மாற்றம்!

இந்திய ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்க பட்ட அக்னிவீரர்களுக்கு மத்திய அரசு இன்ப அதிர்ச்சி தந்துள்ளது...
Published on: 
Summary

அக்னிவீரர்களின் பணிக்காலத்தை இரண்டு ஆண்டுகள் நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், நான்கு ஆண்டுகள் முடிந்த பிறகு பணியிலிருந்து வெளியேற வேண்டிய 75% வீரர்களுக்கும் ராணுவத்தில் தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு கிடைக்கிறது. தகுதி மற்றும் செயல்திறன் அடிப்படையில் நிரந்தரப் பணியில் சேரும் வாய்ப்பும் வழங்கப்படும்.

செய்தியாளர் - ராஜ்குமார். ர

இந்திய அரசு ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் இளைஞர்களைச் சேர்க்கும் நோக்கில் 2022ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்கள் அக்னிவீரர்கள் என அழைக்கப்படுகின்றனர். எழுத்து தேர்வு உடல் தகுதி தேர்வு என பலகட்டங்களை தாண்டி பணியில் சேரும் அக்னி வீரர்களுக்கு நான்கு ஆண்டுகள் மட்டுமே பணிபுரியும் வகையில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நான்கு ஆண்டுகள் முடிவடைந்த பிறகு, தகுதி மற்றும் செயல்திறன் அடிப்படையில் 25 சதவீதம் பேர் மட்டுமே நிரந்தரப் பணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்றும், மீதமுள்ள 75 சதவீதம் பேர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

agniveer
agniveerani

இந்த நிலையில், அக்னிவீரர்களின் முதல் அணியினர் நான்கு ஆண்டுப் பணிக்காலத்தை நிறைவு செய்யவுள்ள சூழலில், அவர்களின் பணிக்காலத்தை நீட்டிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வந்தது. இதன் தொடர்ச்சியாக, இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அக்னிவீரர்களுக்கு கூடுதலாக இரண்டு ஆண்டுகள் பணியாற்ற அனுமதிக்கும் புதிய முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

agniveer
134.5 ஏக்கர் நிலம் ரத்து.. பள்ளிக்கும் தடை.. சோனம் வாங்சுக்குக்கு அடுத்த நெருக்கடி?

இதுகுறித்து விளக்கமளித்துள்ள தலைமைப் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்பிரமணி, ஏற்கெனவே நான்கு ஆண்டுகள் முடிவடைந்த பிறகு பணியிலிருந்து வெளியேற வேண்டிய 75 சதவீத அக்னிவீரர்களுக்கும் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, இந்த இரண்டு ஆண்டுகள் கூடுதல் பணிக்காலத்தை நிறைவு செய்த பிறகு, தொடர்ந்து ராணுவத்தில் பணியாற்ற விரும்பும் அக்னிவீரர்கள் நிரந்தரப் படையில் சேருவதற்கான வாய்ப்பையும் பெறுவார்கள். ஆனால், இதற்கு உரிய தகுதி மற்றும் செயல்திறன் அடிப்படையிலான தேர்வு நடைமுறைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 25 சதவீதம் பேரை நிரந்தரப் பணியில் சேர்க்கும் முறையும் தொடரும். அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்றும், அதன் முதல் நான்கு ஆண்டுப் பணிக்கால நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

agni veer
agni veerani

முதல் அணியைச் சேர்ந்த சுமார் 18,000க்கும் மேற்பட்ட அக்னிவீரர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் நான்கு ஆண்டுப் பணிக்காலத்தை நிறைவு செய்யவிருந்த நிலையில், மத்திய அரசின் இந்த முடிவு வெளியாகியுள்ளது. இதனால், இதுவரை நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பணியிலிருந்து வெளியேற வேண்டிய நிலையில் இருந்த அக்னிவீரர்களுக்கு, ராணுவத்தில் தொடர்ந்து பணியாற்றுவதற்கான கூடுதல் வாய்ப்பு உருவாகியுள்ளது.

agniveer
வீடியோவால் புதிய சர்ச்சை.. நேஹா போராவை குறிவைக்கும் பாஜக.. நடந்தது என்ன?