\
Banks to Remain Open on Sunday Amid Bank Employees’ Strike
கோப்புபடம்ANI

வேலை நிறுத்தம் எதிரொலி.. நாளை வழக்கம்போல் செயல்படவுள்ள வங்கிகள்!! நடப்பது என்ன?

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, நாளை (ஞாயிற்றுக்கிழமை) வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
Published on: 

வங்கி ஊழியர்களின் பணி-வாழ்க்கைச் சமநிலையை மேம்படுத்த வாரம் 5 நாட்கள் மட்டுமே வேலை முறையை உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோரி, இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றன. எனினும், அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருந்து வருகிறது. இந்தச்சூழலில் தான், பழைய ஓய்வூதிய நடைமுறையை மீண்டும் கொண்டுவர வேண்டும்; தற்போது, மாதத்தின் 2 மற்றும் 4 வது சனிக்கிழமைகளில் மட்டுமே வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளிலும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

கோப்புபடம்
கோப்புபடம்ANI

இந்த போராட்ட அறிவிப்பை, அரசு, தனியார், கிராமப்புற மற்றும் கூட்டுறவு வங்கிகளைச் சேர்ந்த 90 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 7 முக்கிய சங்கங்கள் மற்றும் அதிகாரிகளின் கூட்டமைப்பான 'ஐக்கிய வங்கி யூனியன்களின் கூட்டமைப்பு' (UFBU) வெளியிட்டுள்ளது. முன்னதாக, இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 11 அன்று வேலைநிறுத்தம் நடைபெற்றிருந்தது. இதன் தொடர்ச்சியாகத் தான் தற்போது வங்கி ஊழியர்களின் 3 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Banks to Remain Open on Sunday Amid Bank Employees’ Strike
கட்சி மாறிய 111 எம்.பி., MLA! ADR வெளியிட்ட முக்கிய தகவல்... கட்சி தாவல் தடை சட்டத்தில் மாற்றமா?

இந்தச்சூழலில் தான், வாடிக்கையாளர்களின் வங்கி சேவை பாதிக்கப்படாமல் இருக்க, செப்டம்பர் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் (Regional Rural Banks) வழக்கம்போல் செயல்படும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, செப்டம்பர் 27ஆம் தேதி அனைத்து வங்கி கிளைகள், அலுவலகங்கள், ATM-இணைப்பு கிளைகள் மற்றும் Currency Chests முழுமையாக செயல்பட ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் தான், ஞாயிற்றுக் கிழமையான நாளை வங்கிகள் வழக்கம்போல் செயல்படவுள்ளன.

Banks to Remain Open on Sunday Amid Bank Employees’ Strike
CEC அதிகாரம் யாருக்கு? ஞானேஷ் குமார் சர்ச்சைக்கு 30 ஆண்டுகள் பழைய FLASHBACK!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com