\
Gyanesh kumar
Gyanesh kumar ANI

CEC அதிகாரம் யாருக்கு? ஞானேஷ் குமார் சர்ச்சைக்கு 30 ஆண்டுகள் பழைய FLASHBACK!

ஒரே தலைமைத் தேர்தல் ஆணையருக்கு முழு அதிகாரமா, பல உறுப்பினர்கள் கொண்ட ஆணையத்தின் பெரும்பான்மை தீர்மானமா? என்ற ஞானேஷ் குமார் விவகாரம் முக்கியமான அரசமைப்பு கேள்வியை எழுப்புகிறது.
Published on: 
Summary

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையான முடிவுகள் எடுத்ததாக எழுந்த சர்ச்சை, 1990களில் டி.என். சேஷன் நடத்திய சட்டப்போராட்டத்தை மீண்டும் நினைவூட்டுகிறது. பல உறுப்பினர்கள் கொண்ட தேர்தல் ஆணையத்தில் பெரும்பான்மை அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு, இன்றைய விவகாரத்திலும் முக்கிய சட்டக் கோட்பாடாக மையப்படுத்தப்படுகிறது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தன்னிச்சையாக முடிவுகளை எடுத்ததாகப் புயல் கிளம்பியுள்ளது. இந்த நிலையில், மூன்று தசாப்தங்களுக்கு முன்பு தலைமை தேர்தல் ஆணையராக இருந்த டி.என். சேஷன் அதிகாரத்தை மத்திய அரசு குறைத்தபோது அவர் நடத்திய சட்டப்போராட்டம் குறித்து பார்க்கலாம்.

Gyanesh Kumar
Gyanesh Kumar

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தன்னிச்சையாக முடிவுகளை எடுத்ததாகப் புயல் கிளம்பியுள்ளது. இந்த நிலையில், மூன்று தசாப்தங்களுக்கு முன்பு தலைமை தேர்தல் ஆணையராக இருந்த டி.என். சேஷன் அதிகாரத்தை மத்திய அரசு குறைத்தபோது அவர் நடத்திய சட்டப்போராட்டம் குறித்து பார்க்கலாம். )) தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரத்தையும் மிடுக்கையும் தந்தவர் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன். 1990களில் அரசியல்வாதிகளை அஞ்ச வைத்த சேஷன், தேர்தல் ஆணையத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் தன்வசம் வைத்துக்கொள்ள முயன்றார்.

1993ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தை மூன்று உறுப்பினர்கள் கொண்ட அமைப்பாக மத்திய அரசு மாற்றியபோது, சக ஆணையர்களான எம்.எஸ்.கில் மற்றும் ஜி.வி.ஜி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் அதிகாரங்களை முடக்கும் வகையில் சேஷன் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற டி.என்.சேஷன், 'தலைமைத் தேர்தல் ஆணையரே தலைமையானவர்; அவருக்குத்தான் முழு அதிகாரமும் உண்டு' என வாதாடினார்.

TN Seshan
TN SeshanANI

ஆனால், 1995ஆம் ஆண்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்பு அமர்வு, சேஷனின் கோரிக்கையை நிராகரித்தது. பல உறுப்பினர்கள் கொண்ட தேர்தல் ஆணையத்தில் 'பெரும்பான்மை அடிப்படையிலேயே' முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை சட்டபூர்வமாக்கியது. 30 ஆண்டுகள் கழித்து, இப்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளும் இந்த வரம்பை மையப்படுத்தியே அமைந்துள்ளன. டி.என்.சேஷன் வழக்கில் உச்ச நீதிமன்றம் வரைறுத்த 'பெரும்பான்மை அதிகாரம்' என்ற நெறிமுறை, தற்போதைய ஞானேஷ் குமார் விவகாரத்திலும் மிக முக்கியமான சட்டப் புள்ளியாக மாறியுள்ளது.

Gyanesh kumar
SIR சர்ச்சை! 370 நீக்கம் முதல் ராமர் கோயில் வரை.. ஞானேஷ் குமாரின் பரபரப்பு பின்னணி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com